Thursday, July 31, 2003

எதிர் கால நிகழ் கால மனிதர்களுக்கும் மற்றும் உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் ஏன் மொத்த பூமிக்குமே ஒரு மகிழ்ச்சிகர செய்தி...30 வருடங்களின் பின் ஓசோன் படலத்தின் (பூமியின் தரை மேற் பரப்பிலிருந்து 35 தொடக்கம் 45 கிலோ மீற்றர் உயரத்தில் உள்ளது) பாதிப்பு குறைவடைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகளை ஆதாரம் காட்டி நியூ சயன்றிஸ்ற் செய்தி தந்துள்ளது..! இதற்கு முக்கிய காரணம் CFC பாவனை குறைக்கப்பட்டுள்ளமையே ஆகும்....இந்த CFC எனும் வாயு நிலைப் பதார்த்தம் குளிர்சாதனப் பெட்டிகள், சிவிறிகள் (Sprayers) என்பனவற்றில் அதிகம் பயன் படுத்தப்பட்டன என்பதும் பின் இது பாவனையிலிருந்து விலக்கப்பட்டு வேறு மாற்றீடுகள் இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது...!

பதிந்தது <-குருவிகள்-> at 8:01 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க