Friday, August 15, 2003

சந்திரனுக்கு ஆளற்ற கலம் ஒன்றை இந்தியா 2008ம் ஆண்டுக்கு முன்னர் அனுப்ப உள்ளதாக இந்தியப் பிரதமர் Atal Behari Vajpayee அறிவித்துள்ளார். அதேவேளை சீனாவும் அடுத்த மூன்று வருடத்துள் ஆளற்ற கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது...இன்றுவரை சந்திரனுக்கு ஆட்கள் மற்றும் கலங்கள் ஆகியவற்றை அனுப்பிய பெருமையை அமெரிக்காவும் ரஷ்சியாவும் ஜப்பானுமே கொண்டுள்ளன...!
வறிய நாடான இந்தியா இந்த முயற்சிக்காக சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவு செய்யவுள்ளதாகவும் தெரிய வருகிறது...சிலர் இதைக்காட்டியே இந்தியாவின் திட்டத்தை குறை கூறியும் வருகின்றனர்...என்றாலும் இந்தியா தனது முடிவில் திடமாக உள்ளது என்பதற்காகவே இந்தியப் பிரதமர் இந்த அறிவிப்பை விட்டுள்ளார் போல் தோன்றுகிறது...!

பதிந்தது <-குருவிகள்-> at 12:11 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க