Thursday, August 07, 2003

உலகின் முதலாவது குளோனிங் குதிரை (தாயின் உடற் கலம் ஒன்றிலிருந்து உருவாக்கப்பட்டது) ஒன்றை இத்தாலிய உயிரியல் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இப் பெண் குதிரை தாயை ஒத்ததாகவும் 80 இறாத்தல் எடை உள்ளதாகவும் இருப்பதுடன் தாயின் வயிற்றில் முழுவிருத்தி கண்டு இயற்கையான பிறப்பு எய்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது...!
இக் குதிரையின் தாய் இக் குதிரையுடன் இயற்கையான கருக்கட்டலுக்கு உள்ளான தனது இன்னொரு குட்டியையும் சேர்த்தே சுமந்து இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது...சாதனைத் தாய்...!

அந்த வகையில் குளோனிங் மூலம் பிறப்பெடுத்த உயிரினக்கள் வரிசையில் செம்மறியாடு, எலி, பூனை, மாடு, ஆடு, பன்றிகளுடன் குதிரையும் சேர்ந்துள்ளது...மிக அண்மையில் மனிதக் குழந்தை ஒன்றும் குளோனிங் மூலம் பிறந்ததென கூறப்பட்டு சர்ச்சை ஒன்று போய்க்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது...!

இதற்கிடையில் முதல் குளோனிங் செம்மறியாடு (Dolly) சில மாதங்களுக்கு முன் சுவாச நோய் காரணமாக இறந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது...!

பதிந்தது <-குருவிகள்-> at 10:40 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க