Friday, August 08, 2003

சர்வதேச விண் ஆய்வு நிலைய (ISS) அதிகாரியும் ரஸ்(ஷ்)சியருமான Yuri Malenchenko (commander of the International Space Station) (விண்ணில்,ஆண்,வயது 41) அவர்கள் அமெரிக்க பிரஜா உரிமை பெற்ற மற்றும் அமெரிக்க விண்ணியல் ஆய்வுகூட கட்டுப்பாட்டு பெண் அதிகாரியுமான Ekaterina Dmitriev (மண்ணில்,வயது 26) அவர்களை விண் தொலைத்தொடர்பு பரிவர்த்தனக் கருவி மூலம் தகவல் அனுப்பி திருமணம் செய்து கொள்ளவுள்ளாராம்.... இதுவே உலகில் முதன் முதலில் நடக்கவுள்ள விண்,மண் தம்பதிகளுக்கான திருமணமாம்...அதனால் இத்தம்பதிகள் கொஸ்மிக் தம்பதிகள் என அழைக்கப்படுகின்றனர்....அது அப்படியிருக்க ரஸ்சிய விண் ஆய்வு மையம் இது சதி திட்டம் நிறைந்த திருமணம் என விபரித்ததோடு இப்படியான திருமணங்களை எதிர் காலத்தில் தவிர்க்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது...!
இப்படி ரஸ்(ஷ்)சியா கூறிக் கொண்டாலும்.... இன்னொரு வகையில் முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கனுப்பியமை, முதல் பெண் விண்வெளி வீராங்கனையை விண்ணுக்கனுப்பியமை,முதல் விண் சுற்றுலாப் பயணியை விண்ணுக்கனுப்பியமை என்ற வரிசையில் இதிலும் ரஸ்சியா முதலிடத்தை தக்கவைத்துள்ளதால் பெருமையும் பட்டுக்கொள்கிறதாம்...!

பதிந்தது <-குருவிகள்-> at 11:30 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க