Friday, December 12, 2003

உலகின் மக்கள் தொகை 900 கோடியாக உயரும்...!

தலைப்பைக் கண்டு பயந்துவிடாதீர்கள். இன்னும் 297 ஆண்டுகளில் தான் உலகின் மக்கள் தொகை 900 கோடியாக உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு கூறியுள்ளது!

தற்பொழுது உலகின் மக்கள் தொகை 630 கோடியாக உள்ளது. தற்பொழுது உலக அளவில் பெண்களுக்குள்ள சராசரி பிள்ளை பெறும் திறனை அடிப்படையாகக் கொண்டு - ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கையில் இரண்டு பிள்ளைகளை பெறுகின்றார் என்கிறது சராசரி - 2300 ஆம் ஆண்டு இறுதியில் உலகின் மக்கள் தொகை மேலும் 270 கோடி உயரும் என்று அந்தப் புள்ளி விவரம் கூறுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன் இருந்த பிள்ளை பெறும் திறனின் அடிப்படையில் உலகின் மக்கள் தொகை 2075 ஆம் ஆண்டிற்குள் ஆயிரம் கோடியாக உயரும் என்றும், 2200 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,200 கோடியாக உயரும் என்றும் கணித்து கூறப்பட்டது.

ஆனால், மக்கள் தொகை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் தள்ளும் அளவிற்கு பெண்களின் பிள்ளை பெறும் திறன், வெகுவாக குறைந்ததன் காரணமாக அடுத்த 300 ஆண்டுகளில் மேலும் 300 கோடி மக்கள் தொகை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வருடத்திற்கு 13 விழுக்காடு அளவிற்கு உயர்ந்து வரும் ஆப்பிரிக்க கண்டத்தின் மக்கள் தொகை, அடுத்த 300 ஆண்டுகளில் 24 விழுக்காடாக உயரும். ஆனால், தற்பொழுது ஆண்டிற்கு 12 விழுக்காடாக உயர்ந்து வரும் ஐரோப்பாவின் மக்கள் தொகை 7 விழுக்காடாக குறையும்.

இதே காலக்கட்டத்தில் 60 வயதுக்கும் தாண்டியப் பின்னும் உயிர் வாழ்பவர்களின் எண்ணிக்கை தற்பொழுதுள்ள 10 விழுக்காட்டிலிருந்து 38 விழுக்காடாக உயரும். அதே போல, உலக மக்களின் சராசரி வாழ்க்கைக் காலம் 26 வயதிலிருந்து 2300 ஆம் ஆண்டு 50 வயதாக உயரும்.

--------------------------------------------
நன்றி... வெப்புலகம் டொட் கொம்

பதிந்தது <-குருவிகள்-> at 2:18 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க