Thursday, December 25, 2003

என்ன நடந்தது பிரித்தானிய ரோவர்-Beagle 2 க்கு..?!

பிரித்தானியாவுக்குச் சொந்தமானதும் 35 மில்லியன் பவுன்கள் பெறுமதி மிக்கத்தும், ஐரோப்பா சார்பில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட Beagle 2, திட்டமிட்டபடி கிறிஸ்மஸ்தினமான இன்று செவ்வாயில் தரையிறக்கப்பட முயற்சிக்கப்பட்ட போதும் அது தரையிறங்கியதை உறுதிப்படுத்தும் மின்னலை தகவல்கள் அதனைக் கட்டுப்படுத்தும் பூமியில் உள்ள நிலையம் பெறத் தவறிவிட்டது. இதனால் Beagle 2 இன் தரையிறக்கத்தையும் அதன் செயற்பாடுகள் வெற்றிகரமாக உள்ளதா என்பதையும் உறுதி செய்வதற்கு எந்த ஆதாரமும் இன்னும் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்கவில்லை...எனினும் நாசா நிறுவனத்தின் உதவியுடன் அதில் இருந்து ஏதாவது மின்னலைத் தகவல்கள் பெறப்பட முடியுமா என தற்போது முயற்சிக்கப்படுகிறது...இம் முயற்சி அடுத்த வருடம் முற்பகுதி வரை தொடரும்....!

இந்தத் தரையிறக்கம் வெற்றி அளிக்காத போதிலும் Mars express எனும் Beagle 2 இன் தாய்க்கலம் செவ்வாயை அண்மித்த சுற்றுப்பாதையில் சுற்றியபடி தெளிவான முப்பரிமானப்படங்களை அதில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ரடார் சாதன இணைப்புக்கள் கொண்ட கமராக்கள் மூலம் பெற்று அனுப்பி வருவதாக அறியப்படுகிறது....இந்தப் பயண முயற்சியில் இது ஒரு முக்கிய வெற்றியாகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்...!

மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..

பதிந்தது <-குருவிகள்-> at 1:38 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க