Thursday, December 04, 2003

எயிட்ஸ் நோய் ......

எயிட்ஸ் நோய் வைரசின் பெருக்க வேகத்தை உடலில் கட்டுப்படுத்தி எயிட்ஸ் நோயாளிகளை நீண்ட நாளைக்கு வாழ வைக்கும் திட்டத்தை உலகம் பூராவும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பிக்கவுள்ளது...! இத்திட்டத்திற்கு வைரசின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகள் பாவிக்கப்படவுள்ளன...இவை முன்னரும் பாவிக்கப்பட்ட போதும் விலை மிக அதிகமாகக் காணப்பட்டன...தற்போது பெருகி வரும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மலிவு விலையில் இம்மருந்துகளை தயாரித்து வழங்க பல மருந்து உற்பத்தி செய்யும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வந்துள்ளன.....!

இது காலத்தின் கட்டாயம் போலும்....!
---------------------------------------------------
---------------------------------------------------
உலகில் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துவருவதுடன் இவ்வாண்டில் அது இதுவரை காலத்துக்குமான உச்ச நிலையை எட்டியுள்ளது....! உலகில் 40 மில்லியன் மக்கள் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் இவர்களில் 2.5 மில்லியன் பேர் 15 வயதுக்கும் உட்பட்ட சிறுவர்கள்...இவ்வாண்டில் 2003 மட்டும் சுமார் 5 மில்லியன் பேர் எயிட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளாகி உள்ளனர்...மூன்று மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்...!

உலகின் எயிட்ஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக தொடர்ந்து ஆபிரிக்கா விளங்குகிறது...ஆசியாவில் இந்தியாவும் சீனாவும் எயிட்ஸ் தாக்கத்துக்கு அதிகம் உள்ளாகும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளன....!

ஆபிரிக்காவில் பொஸ்வானாவிலும் சுவாசிலாந்திலும் சுமார் 40 சதவீதம் வளர்ந்தவர்கள் எயிட்ஸ் உடன் வாழ்கின்றனர்...அது மட்டுமன்றி அப்பிராந்திய சில நாடுகளில் ஐந்து கர்பிணித்தாய்மாருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் எயிட்ஸ் தொற்றிய தாய்மார் வாழ்கின்றனர்.....!

இப்படியே போனால் மனித இனமும் சுவடுகளாக பூமியில் காட்சியளிக்கும் நாள் அதிக தூரமில்லை....!

பதிந்தது <-குருவிகள்-> at 5:48 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க