Friday, December 05, 2003

ஆதியான ஆண் சுவடு...!

கடலில் வாழும் கடற்தெள்ளின் மூதாதைய ஆண் ஒன்றின் சுமார் 450 மில்லியன் வருடங்கள் பழமையான சுவட்டு நிலை உடல் ஒன்று பிரித்தானியாவில் பாறைகளிடையே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....! இது இறால் போன்ற விலங்குகள் அடங்கும் வகுப்பு கிறஸ்ரேசியாவுக்குள்(Crustacea)அடங்குவதாக சுவட்டு உயிரியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்....!

இவ்விலங்கு நன்கு விருத்தியடைந்த குருதிச் சுற்றோட்டத்தொகுதியையும் சுவாசத்திற்கான பூக்களையும் கொண்டிருப்பதாகவும் தெளிவான ஆண் இலிங்க உறுப்பும் இருந்ததற்கான அடையாளங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன...!

இது எரிமலைச் சாம்பல்களின் இடையே சிக்கிய நிலையில் அவதானிக்கப்பட்டுள்ளது....உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சுவடுகளில் மிகவும் பழமையான ஆண் சுவடு இது என்பதும் இதற்கு ஆய்வாளர்கள்..Colymbosathon ecplecticos.. 'swimmer with a large penis."
இப்படிப் பெயரும் இட்டுள்ளனர்....!

மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..

பதிந்தது <-குருவிகள்-> at 11:36 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க