Wednesday, January 07, 2004

வால் நட்சத்திரத்தின் கரு...The Nucleus of Comet Wild 2

அமெரிக்க நாசாவின் நட்சத்திரத்தூசு விண் ஆய்வுக்கலம் (Stardust space probe) கடந்த இரண்டாம் திகதி வால் நட்சத்திரம்(Comet Wild 2) ஒன்றின் கருப்பகுதியை தெளிவாக படம் பிடித்து அனுப்பி உள்ளது...இந்தக் கருவே சூரியன் போன்ற வெப்பமான நட்சத்திரங்களுக்கு அருகில் வரும் போது தூசுத்துகள்களை வால் போல் வெளியிட்டு வால் நட்சத்திரமாகின்றன...!
இப்படங்கள் மீதான ஆய்வு வால் நட்சத்திரங்கள் பற்றிய புதிய பார்வைக்கு இட்டுச் செல்லும் என விஞ்ஞானிகள் கருத்துரைத்துள்ளனர்...!

அத்துடன் இந்த விண்ணாய்வுக்கலம் பூமியில் இருந்து 708 மில்லியன் மைல்களுக்கு அப்பால் சென்று எவ்வாறு சூரியத் தொகுதியும் பூமியில் உயிரிங்களும் தோன்றின என்று ஆய்வு செய்யவுள்ளதாக தெருவிக்கப்படுகிறது....!

மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..

பதிந்தது <-குருவிகள்-> at 4:09 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க