Monday, March 15, 2004

சூரியக் குடும்பத்தில் பத்தாவது கோள் கண்டுபிடிப்பு...?!

எமது சூரியக் குடும்பத்தில் புதன் வெள்ளி பூமி செவ்வாய் வியாழன் சனி யுரானஸ் நெப்ரியூன் புளூட்டோ போன்ற கோள்களுடன் புதிய கோள் என்று எதிர்காலத்தில் கருதத்தக்க மிகவும் குளிரானதும் கறுப்பானதும் உறுதியானதும் புளூட்டோவின் விட்டத்துடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 3/4 விட்டமுடையதுமான விண் பொருள் ஒன்றை விண்ணியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

1930 இல் புளுட்டோ கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் சூரியத் தொகுதியில் கண்டுபிடிக்கபட்ட பெரிய விண் பொருளான இது சூரியனில் இருந்து கிட்டத்தட்ட 9 பில்லியன் மைல்களுக்கு அப்பால் இருப்பதுடன் இதன் மேற்பரப்பு வெப்பநிலை - 400 பாகை பரனைட் (0F) என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்...!

அப்புதிய சூரியக் குடும்ப உறுப்பினருக்கு செட்னா (Sedna) என்றும் பெயர் சூட்டி உள்ளனர்...! இது சூரியக் குடும்பத்தின் 10 வது கோளாகுமா....??! ஆகலாம்...!

இக்கண்டுபிடிப்புக்கான முதலாவது அவதானத்தை அமெரிக்க கலிபோர்னிய விண்ணியல் ஆய்வு தொலைக்காட்டி மூலமே அவதானித்துள்ளனர்...!


மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 5:58 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க