Monday, March 01, 2004

வளைகாப்பு--விஞ்ஞான ஆய்வில் நிரூபிப்பு

தமிழர்களின் கலாசாரத்தில் (இன்றும் தமிழ்நாட்டில் வழக்கில் இருப்பது) கர்ப்பவதியான பெண்ணிற்கு வளைகாப்பு சடங்கு நடத்துவது வழமையாக இருந்தது...! (இலங்கைத்தமிழரிடத்தில் இது மூடநம்பிக்கை என்று சொல்லி அருகிவிட்டது) இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய வளையல்களை (காப்பு) அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர்....!

மிகச் சமீபத்தில் செம்மறி ஆடோன்றில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து மெல்லிசைகளை (low notes பியானோ இசை போன்றவற்றை) கருவில் இருக்கும் குட்டி ஆடொன்று கேட்டு உணர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது...! மனிதனின் கருப்பையும் ஆடுகளின் கருப்பையும் அமைப்பில் கிட்டத்தட்ட ஒத்தவையாக இருப்பதால் இதே நிலை மனித சிசுவிற்கும் உறுதிப்படுத்தக் கூடியதே....!

தாயின் கருவறையில் இருக்கும் போதே குழந்தை கேட்டல் திறனை விருத்தி செய்யத் தொடங்குவதாகவும் தாயின் குரல் என்பவற்றை அடையாளம் கண்டு கொள்வதாகவும் இவ்வாய்வு கூறுகிறது....! அதேவேளை உயர் அளவு சத்தங்கள் கருப்பைச் சுழலில் நுண் அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன் சிசுவின் கேட்டல் திறனையும் பாதிப்படையச் செய்ய சாத்தியம் இருக்கின்றது எனவும் குறிப்பாக அதிகம் இரைச்சல் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் இதனால் பாதிப்படைய சாத்தியம் இருப்பதாகவும் முன்னர் கருதப்பட்டது இருப்பினும் சிலவகை உயர் சத்த அலைகள் கருப்பைச் சூழலினால் வடிகட்டப்படுவதும் இவ்வாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது....!

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 4:58 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க