Thursday, March 04, 2004

புதியதொரு நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்பு!


நாம் வாழும் இப்பூமி இடம்பெற்றுள்ள இந்த சூரிய மண்டலம் உருவான சில நூறு ஆண்டுகளில் உருவாகிய மற்றொரு நட்சத்திர மண்டலத்தை ஸ்வீடன், பிரான்ஸ் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்!

நமது பூமியில் இருந்து 1323 கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள அந்த நட்சத்திர மண்டலத்திற்கு ஏபல் 1835161916 என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

அதாவது அந்தப் பிரபஞ்சம் உருவான போது வெளிப்பட்ட ஒளி இப்பொழுதுதான் பூமியை அதாவது நமது சூரிய மண்டலத்தை எட்டியுள்ளது என்று ஐரோப்பாவின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு அமைப்பான தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்த ரோசர் பெல்லோ என்ற விஞ்ஞானி அந்த நட்சத்திர மண்டலத்தின் குழந்தை பருவத்தைத்தான் இப்பொழுது நாம் கண்டுகொண்டிக்கிறோம் என்று அவர் கூறினார்.

விர்கோ நட்சத்திர மண்டலத்திற்கு அருகே இந்த நட்சத்திர மண்டலம் மிகச் சிறியதாக தெரிவதாகவும், அதன் பரப்பு நமது சூரிய மண்டலத்தை விட பத்தில் ஒரு பங்காக மட்டுமே உள்ளது என்று டேனியல் ஷாரஃப் என்பவர் கூறியுள்ளார்.

இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் நமது பிரபஞ்சத்தில் இருந்து 1,300 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திர மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கும் அப்பால் உள்ள மற்றொரு நட்சத்திர மண்டலம் இப்பொழுது விண்வெளி ஆய்வாளர்களுக்கு புலப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks webulagam.com

பதிந்தது <-குருவிகள்-> at 4:40 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க