Friday, March 12, 2004

முலையூட்டிகளில் வாழ்க்கைக் காலம் பூராவும் முட்டை...!

முலையூட்டி விலங்குகளில் ( மனிதன் உள்ளடங்கலாக)உள்ள முட்டை (egg) உற்பத்திக்கான வரையறையை கடந்து முட்டை உற்பத்திக்கான இடமான சூலகத்தில் இருந்து வாழ்க்கைக் காலம் முழுவதும் முட்டைகளை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்...! ஆணில் வாழ்க்கைக் காலம் பூராவும் விந்து உற்பத்தி நடை பெறுவதற்கு ஒப்ப....!

இப்பரிசோதனை எலியின் சூலக மூலவுயிர்ப்படைக் கலங்களில்(mouse's ovary of stem cells) இருந்து உருவான சூலகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகள் மூலம் வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுள்ளது...! இதன் மூலம் மனிதரில் புற்று நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் பக்கவிளைவால் நிகழும் சூலகச் சிதைவினால் அல்லது கோளாறினால் முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டவர்களிலும் இயற்கையாக மாதவிடாய்ச் சக்கரம் நிகழாது நின்றுவிடும் வயதின் பின்னரும் தொடர்ந்து முட்டை உற்பத்தியை சாத்தியமாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளர்னர்...இருப்பினும் இப்பரிசோதனை இன்னும் மனித சூலக மூல உயிர்க்கலங்களைப் பயன்படுத்தியோ அல்லது பிரதியீடு செய்தோ மனிதப் பெண்ணின் சூலகத்தில் செய்யப்படவில்லை....!

இக்கண்டுபிடிப்பானது இவ்வாராச்சியின் ஆரம்பநிலையே தவிர இன்னும் கடக்க வேண்டிய பாதைகள் நிறைய இருக்கின்றன...!


மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 11:16 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க