Tuesday, March 23, 2004

காபன் (C) எனும் அர்ப்புத மூலகத்தின் 5 ந்தாவது நிலை....!

காபன் (C)...இது ஒரு இரசாயன மூலகம்...இது தூய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெளதீக இயல்புகளை வெளிப்படுத்தியவாறு பிறதிருப்பங்களாக இருக்கக் காணப்படுகிறது,,,எமது உடல் ஆகினும் சரி எந்த சேதன உடலாகினும் சரி எதிலும் காபன் ஒரு மிக முக்கியமான பங்காளி அது இல்லையேல் பூமியில் உயிரினங்கள் இல்லை....!

காபன் பிறதிருப்பங்களில் (Allotropic form) கிரபைட்(பென்சில் கரி- Graphite)) டையமன்ட் (வைரம்-Diamond) (இவை இரண்டும் இயற்கையில் உண்டு) பக்கிபோல் (Buckyballs) நனோரியூப் (Nanotubes) ஆகிய வேறு இரு C நிலைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டன.

தற்போது அவுஸ்திரேலிய கன்பராவில் உள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மிகவும் குறந்த திணிவுடைய மிக நுண் குழாய் வடிவான வலை அமைப்பைக் கொண்ட ஸ்பொண்ஜி சொலிட்-spongy solid (பஞ்சுத் திணிவு) -நனோ fஓம் (Nano foam)எனும் 5ந்தாவது காபன் நிலையை C அணுக்கள் மீது 10,000 Hz அதிர்வுள்ள கதிர்களைச் செலுத்தி 10,000 பாகை செல்சியசிற்கு வெப்பப்படுத்தி உருவாக்கி உள்ளது....!

இந்தக் காபன் நிலை வழமைக்கு மாறாக காந்தத்துடன் கவர்ச்சியை காண்பிக்கும் பெளதீக இயல்பை வெளிப்படுத்தி இருக்கின்றது...அத்துடன் இக்காபன் நிலையை புற்றுநோய்க்கான சிகிச்சை அளிப்பிலும் மூளை மற்றும் குருதிப் பாதைகள் தொடர்பான ஸ்கானிங்கிலும் (Scanning) குறிப்பிடத்தக்க வகையில் எதிர்காலத்தில் பாவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது....!

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 2:58 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க