Thursday, March 25, 2004

மனிதக் கூர்ப்பின் (Human evolution) மூலம்...!

கிட்டத்தட்ட சுமார் 2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் கிழக்காபிரிக்க புற்தரைகளில் வாழ்ந்த தற்கால மனிதனின் மூதாதையரில் சூழலின் தாக்கத்தின் வாயிலானது எனக் கருதத்தக்க பாரம்பரிய அலகு (gene) மாற்றம் (mutation)- (genetic mutation) ஒன்று ஏற்பட்டதே ஒப்பீட்டளவில் சிறிய, வலிமை குறைந்த தாடைகள் உருவாகவும் வலிமை குறந்த தடைகளைத் தாங்கி நிற்கும் முகத்தசைகள் உருவாகவும் பெரிய கனவளவுள்ள மண்டையோடு உருவாகவும் பெரிய மூளை தோன்றவும் பற்கள் சிறிதாகவும் வழிவகுத்ததாக அமெரிக்க பென்சில்வனிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்...! இதன் மூலமே தற்கால மனிதனை நோக்கிய மனிதப் பரிணாம வளர்ச்சி ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்...!

இது மனித உயிரியல் தோற்றம் பற்றிய வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் வாதப் பிரதிவாதங்களைத் தோற்றிவித்துள்ளது....!

அதன் பிரகாரம் முகத்தசை தொடர்பான ஒரு பரம்பரை அலகு (gene) மாற்றம் -mutation- மட்டும் மேற்கூறிய எல்லா மாற்றங்களுடன் முழு மனித பரிணாம வளர்ச்சியையும் சாத்தியப்படுத்தி இருக்க முடிமா என எதிர்ப்பு வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது..! அப்படி தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பின் அவை நிகழ்வதற்கான சாத்தியங்கள் என்ன என்றும் வினா எழுப்பப்பட்டுள்ளது....!

இருப்பினும் சுவட்டாய்வுகள் மூலம் சும்மார் 2.5 மில்லியனின் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தற்கால மனிதன் ஒரு வகை மூதாதையர் எலும்பாலான கருவிகள் செய்து வாய்க்கு வெளியே உணவுகளை பறிக்கவும் சிறிதாக்கி உண்ணவும் பழகி இருக்கின்றனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது...இது அவர்களுக்கு முந்திய மூதாதையரைவிட மூளை வளர்ச்சி அதிகரித்திருப்பதையும் பற்களால் உணவைப் பறிப்பதை தவிர்க்க முயன்றுள்ளதையும் காட்டுகிறதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்...!

வலிமை குறந்த தாடைகளை தற்கால மனிதனிலும் வலிமை கூடிய தாடைகளையும் அவற்றுடன் கூடிய பலமான தசைகளையும் பழைய உலகுக் குரங்குகளான சிம்பென்சிகளில் இன்றும் தெளிவாக நோக்க முடியும்...சிம்பென்சிக்கும் தற்கால மனிதனுக்கும் இடையே பாரிய அளவு பரம்பரை அலகு வேறுபாடுகள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது....!

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 12:03 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க