Tuesday, March 02, 2004

விண்ணில் பறந்த Rosetta probe

இன்று..(02-03-2004..0717 GMT)...Rosetta விண்கலத்தை தாங்கிய உந்துவாகனம் வெற்றிகரமாக தென் அமெரிக்கக் கரையில் இருக்கும் Kourou, French Guiana இல் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டு... வால்நட்சத்திரம் நோக்கிய Rosetta probe ன் 10த்தாண்டுப் பயணமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது....!

இக்கலம் வால் நட்சத்திரத்தில் நடத்தப் போகும் ஆய்வை வைத்து 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படும் நமது சூரியத் தொகுதியின் தோற்றம் பற்றிய ஆய்வையும் பூமியில் உயிரினினங்கள் தோன்ற ஏதுவாயிருந்த இரசாயன நிலைமைகளையும் கண்டறிய முடியும் என்று நம்பப்படுகிறது...சூரியத் தொகுதிக்குரியதான குறிப்பிட்ட வால் நட்சத்திரத்தில் அதிக இரசாயனப் பொருட்கள் இன்னும் அதிக மாற்றங்கள் இன்றியேதான் காணப்படுவதாக சொல்லப்படுகிறது....!

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 12:38 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க