Thursday, April 29, 2004

செவ்வாயில் அந்த 90 நாட்கள்...

திட்டமிட்டபடி ஸ்பிரிட் மற்றும் ஒப்பசுனிற்றி ரோவர்கள் தமது செவ்வாய்க்கான 90 நாட்கள் என்ற பயண இலக்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து இன்னும் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.எனினும் இவற்றின் மின் கலங்கள் மட்டும் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் பழுதடைந்துள்ளன...அதற்குக் காரணம் அதிக பாவனையும் தூசிப்படிவுகளும் என்றே கருதப்படுகின்றது. இந்த ஆறு சக்கரங்கள் கொண்ட ரோவர்கள் இரண்டும் செவ்வாய் பற்றிய பல அரிய புகைப்படங்களையும் தகவல்களையும் பூமிக்கு அனுப்பியிருந்தன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...இதில் ஒப்பசுனிற்றி ரோவர் மட்டும் சுமார் 0.5 மைல்கள் ஓடி சுமார் 12,500 படங்களையும் பிடித்துள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்...!அத்துடன் இது 5 பாறைகளில் துளைகள் இட்டு சோதனையும் நடத்தி உள்ளது..! ஸ்பிரிட்டும் சுமார் 0.75 மைல்கள் பயணம் செய்து செவ்வாயின் பாறைகளின் அமைப்புக்கள் பற்றிய பல அரிய தகவல்களைப் பெற உதவி செய்ததுடன் செவ்வாய் பற்றிய பல அரிய கலர்ப்படங்களையும் பூமிக்கு முதன் முதலில் அனுப்பியும் வைத்திருந்தது...!

எனினும் ஸ்பிரிட் தொடர்ந்து பயணித்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் உள்ள (அது பயணத்தை ஆரம்பித்த இடத்தில் இருந்து) மலைப்பாங்கான இடம் இன்றை நோக்கிப் பயணித்து அதன் இறுதி இலக்கை அடையும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...! ஓப்பசுனிற்றியும் தொடர்ந்து சில ஆய்வுகளில் ஈடுபடவுள்ளது.

நீங்களும் செவ்வாயில் ஸ்பிரிட்டை, ஒப்பசுனிற்றியை இயக்க விரும்புகிறீர்களா..??.. இதோ இங்கே அழுத்துங்கள் அதிசயம் காத்திருக்கிறது...!(NASA)

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 1:58 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க