Friday, April 30, 2004

போரும் கோரமும் தொடர்கதை...!

யுத்தம் பொது மக்களுக்கும் போர் வீரர்களுக்கும் உடனடிப் பாதிப்பை மட்டுமன்றி காலங்கடந்த பாதிப்புக்களையும் உண்டுபண்ணுகிறது....அமெரிக்க இராணுவத்தில் சேவை புரிந்த புரியும் வீரர்களில் சுமார் 60% மானோர் தசைகளையும் நரம்புகளையும் பாதிக்கக் கூடிய நோய் ஒன்றினால் சாதாரண பொது மக்களைவிட
மிக அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பைக் கொண்டிருக்கின்றனர் என்று சுமார் 400,000 அமெரிகக் வீரர்கள் மத்தியில் ஒன்பது ஆண்டுகளாக செய்த ஆய்வொன்று எடுத்துக் காட்டி உள்ளது...!

(The nerve disorder, known as) Amyotrophic lateral sclerosis (ALS) என்று அழைக்கபப்டும் இந்த நோய்க்கான உண்மையான காரணி என்ன என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் போர்த்தளபாடங்களில் பாவிக்கப்படும் வேறுபட்ட நச்சு இரசாயனப்பதார்த்தங்கள் கொண்டிருக்கும் கூறுகளே இதற்கு முக்கிய காரணமாக அறியப்படுகின்றன...(உதாரணத்துக்கு போர்வீரர்கள் செயற்பட்ட சில சூழல் காரணிகளாக ஈயத்தின் பங்களிப்பும் வைரசுக்களின் தாக்கமும், மேலதிக பலமான பயிற்சியும் சுட்டிக்காட்டப்படுகின்றன..)..அவை எவை என்பது தெளிவாக இனங்காணப்படவில்லையாயினும் வளைகுடாப் போரின் போது ஒரு வகை இரசாயனத்துக்கு முகங்கொடுத்த வீரர்களில் ஏற்பட்ட வளைகுடாப் போர் பல்வகை நோய் அறிகுறி (Gulf War syndrome) எனும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயைப் போல் இதுவும் போர் வீரர்களை அவர்கள் எங்கு செயற்பட்டிருப்பினும் இராணுவ ஆயுத தளபாடங்களின் பாவிப்பால் வெளியிடப்படும் இரசாயனக் கூறுகளிற்கு முகங்கொடுத்திருப்பின் பாதிப்பிற்கு உள்ளாகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...!

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 3:35 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க