Thursday, April 22, 2004

அப்பா இன்றி வந்த பிள்ளைகள்....!

வெவ்வேறு பெண் எலிகளின் முட்டைகள் இரண்டை தகுந்த முறையில் கருக்கலப்புச் செய்து பத்து எலிக்குஞ்சுகள் உருவாக்கப்பட்டுள்ளது....இதை சாதிப்பதற்கு 460 முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன...! இவ்வாறு பிறந்த எலிக்குஞ்சுகளின் ஒன்று மட்டுமே முழு வளர்ச்சி கண்டுள்ளது....!

கன்னிப்பிறப்பாக்கல் மூலம் சந்ததிகளை உருவாக்குதல் என்பது தாவரங்களிலும் இன்னும் சில பூச்சிகள் மீன்கள் மற்றும் தவளைகளில் காணப்படுவது இயல்பு....ஆனால் முதற் தடவையாக முலையூட்டிகளில் இப்பரிசோதனை வெற்றிகரமாக செய்து காட்டப்பட்டுள்ளது....!

இருந்தாலும் இப்பரிசோதனையின் வெற்றிவாய்ப்பு என்பது மிக அரிதாக இருப்பதுடன் உருவாகும் சந்ததிகள் சாதாரணத் தன்மையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் தானா பிறக்கின்றன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது..! மனிதக் குலோனிங் போல இம்முறையைக் கையாண்டு மனிதக் குழந்தைகளை உருவாக்குவதிலும் பல இடர்பாடுகள் இருப்பதுடன் இவை இயற்கையாக உருவாகும் குழந்தைகளுக்கு நிகர்ந்தவையாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே....???!

இருந்தாலும் முட்டை, விந்துக் கருக்கட்டல் இன்றி முலையூட்டிகளிலும் முழு வளர்ச்சியடைந்து சந்ததிப் பெருக்கம் செய்யும் இயல்பைக் கொண்டிருப்பது இப்பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது....!

இப்பரிசோதனை ஜப்பானிய ரோக்கியோ விவசாயப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளது...!

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 9:23 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க