Friday, April 23, 2004

புற்றுநோய்க்கு புதிய வழியில் சிகிச்சை...!

புற்றுநோய்க்கு புதிய வழியில் சிகிச்சை அளிக்கக் கூடிய வகையிலான பரிசோதனை ஒன்றில் உயிரியல் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி அடைந்துள்ளனர்...ஆனாலும் அது எலிகளில் பரிசோதனை அளவிலேயே வெற்றி அளித்துள்ளது...!

ஈ கொலாய் (E.coli) எனும் பக்ரீறியாவின் பிறப்புரிமை அலகான டி என் ஏ (DNA) இல் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து பெறப்பட்ட பக்ரீறியாவை புற்றுநோய்த் தாக்கப்பகுதிக்குள் ஊசிகள் மூலம் செலுத்தி அவை புற்றுநோய்க் கலங்களைத் தாக்கும் வேளை புற்றுநோய்க்கான இரசாயன மருந்தை 6-MPDR(இது தானாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கலங்களத் தேடி அழிக்காது) செலுத்துவதன் மூலம் அது குறித்த பக்ரீறியாவின் தாக்கத்துக்குள்ளான புற்றுநோய்க் கலங்களைத் தாக்கி அழித்து புற்று நோயைக் குணப்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது....! குறிப்பிட்ட மருந்து குறித்த பக்ரீறியா வெளியிடும் ஒரு இரசாயனப் பதார்த்தம் (Enzyme) உடன் தாக்கத்தில் ஈடுபட்டே பக்ரீறியாவின் தாக்கத்துக்குள்ளான புற்றுநோய்க் கலங்களை அழிக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது....! இவை புற்றுநோயால் பாதிக்கப்படாத கலங்களை தாக்கி அழிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது....!

இதே போன்ற இன்னோர் பரிசோதனையை பிரித்தானிய நொட்டின்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்...இதில் பிறப்புரிமை மாற்றம் செய்யப்படாத உணவு நஞ்சாதலில் பங்கெடுக்கும் ஒரு பக்ரீறியாவான குளஸ்றிடியதின் (Clostridium) வித்திகளை புற்றுநோய் தாக்குத்துக்குள்ளான பகுதிகளினுள் செலுத்த அவை ஒக்சியன் குறைந்த புற்றுநோய்க்கலங்கள் உள்ள பகுதிகளின் முளைத்து புற்றுநோய்க்கெதிரான மருத்தை ஊக்கப்படுத்தும் குளஸ்றிடியம் வெளியேற்றும் ஒரு இரசாயனப் பொருளை (Enzyme) வெளியிட அதுவும் புற்றுநோய்க்கான மருந்தும் இணைந்து புற்றுநோய்க்கலங்களை அழிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர்...! இதில் குறிப்பிட்ட பக்ரீறியா புற்றுநோய்கலங்களினுள் நுழைந்து வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....!

எது எப்படியோ இவை அனைத்தும் எலிகளில் பரிசோதிக்கப்பட்டு முதற்கட்ட பரிசோதனை வெற்றியையே அளித்துள்ளன...மனிதரில் இம்முறைகளைப் பயன்படுத்த இன்னும் கடக்க வேண்டிய பாதைகள் நிறைய இருக்கின்றன...என்றாலும் இக்கண்டுபிடிப்புக்கள் புற்றுநோய் சிகிச்சை முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உண்டு பண்ண வாய்ப்புண்டு.....!

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 4:36 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க