Saturday, May 01, 2004

உடலுக்குள் வைத்தியராகும் நுண் கணணிகள்...

ஆம்...மிகச் சிறிய உயிரியல் கணணி, வைத்தியராகும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது...இப்படிச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று...!

கணணி என்றால் ஏதோ இலத்திரனியல் உபகரணம் என்ற நிலை போய் தற்போது மனிதனைப் போல் சூழ்நிலைக்கேற்ப நிலைமைகளைப் புரிந்து கொண்டு விளைவுகாட்டக் கூடிய அலகு என்ற ஒரு நிலை உருவாகி வருகிறது...இந்த வகையில் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் பிறப்புரிமையில் அலகுகான டி என் ஏ (DNA) கொண்டு ஒரு மிக நுண், முற்றுமுழுதாக உயிரியல் இரசாயனம் சார்ந்து அமைக்கப்படும் கருவி ஒன்று கண்டறியப்பட்டு பரிசோதனைக் குழாய்களில் செயல்வடிவத்துடன் இருப்பதாக அவ் ஆய்வறிக்கை கூறுகிறது...!

குறித்த டி என் ஏக் கணணி எம் ஆர் என் ஏ (messenger RNA -mRNA) எனும் டி என் ஏக்கு ஒருவகையில் ஒத்த கலங்களில் ஜீன்களில் இருந்து புரதங்களை உருவாக்க பயன்படும் கட்டமைப்புடன் நெருங்கிய இடைத் தொடர்பைக் கொண்டிருக்கிறது....இதை அடிப்படையாகக் கொண்டு புற்றுநோய்க் கலங்களால் உருவாக்கப்படும் எம் ஆர் என் ஏ யை இந்த டி என் ஏ க் கணணி மூலம் இனங்கண்டு அவை பிரசன்னமாக உள்ள போது அவற்றின் செயற்பாட்டை (புற்றுநோயை வெளிப்படுத்தும் ஜீன்களில் (Gene) இருந்து புரதங்கள் உருவாவதை) தடுக்கும் வகையில் புற்றுநோய்க்கெதிரான மருந்துகளை (இவையும் குறிப்பிட்ட புற்றுநோய் ஜீன்களில் இருந்து அவற்றிற்குப் பொறுப்பான புரதங்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையிலான டி என் ஏக்களால் ஆனவை) குறிப்பிட்ட கலங்களில் விடுவித்து புற்றுநோயைக் கட்டுப்படுத்த வாய்ப்பளிக்க முடியும் என்று அவ்வாராய்ச்சி தொடர்ந்து சொல்கிறது....!

எது எப்படி இருப்பினும் இக்கணனிகள் உடலின் உள்ளகச் சூழலில் தாக்குப்பிடித்து வேலை செய்வதற்கும் இன்னும் பல தடைகளைத் தாண்டுவதற்கும் நிறைய ஆய்வுகள் தொடரப்பட வேண்டி இருப்பதால் இக்கண்டுபிடிப்புக்கள் இன்றையளவில் இக்கணணிகள் தொடர்பான வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளே ஆகும்....! எனினும் இந்த முயற்சிகள் முழு வெற்றி பெற்றால் சிறிய டி என் ஏக் கணணிகள் வைத்தியர்களாக உடலிற்குள்ளேயே சிறிய மாத்திரிகைகளினூடு அனுப்பப்பட்டு செயற்பட வைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்....!

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 12:18 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க