Wednesday, May 05, 2004

முலையூட்டிகளில் மூளை மணிக்கூடுகளின் எண்ணிக்கை இரண்டு...?!

மனிதர்களாகிய நாம் இயற்கையாகவே மூளையின் செயற்பாட்டினால் கட்டுப்படுத்தப்படும் நேரத்திட்டமிடல் மூலமாக உடற்தொழிற்பாடுகளை, நடத்தைகளைக் காண்பிக்கின்றோம்...அதாவது குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணத் தூண்டுவது..தூக்கத்திற்குத் தூண்டுவது...போன்ற செயற்பாடுகள்...!இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் மையம் - suprachiasmatic nucleus-(மூளை மணிக்கூடு).. மூளையில் மணிக்கூட்டுக் கலங்கள் (clock cells ) என்று விசேடித்து அழைக்கப்படும் கலங்களால் ஆக்கப்படுள்ளது. இந்த முக்கிய மூளைக் கடிகாரம் இரவு பகலை (வெளிச்சத்தின் அடிப்படையில்) அடிப்படையாகக் கொண்டு இயங்கி உடற் தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது...அண்மையில் அமெரிக்க ஆய்வாளர்கள் எலிகளில் செய்த ஆய்வென்றின் மூலம் இந்த முக்கிய மூளைக்கடிகாரத்தைவிட மேலும் ஒரு கடிகாரத்தின் செயற்பாட்டை மூளையில் அவதானித்துள்ளனர்...! ஆனால் இந்த இரண்டாவது மூளை மணிக்கூட்டின் செயற்பாடு எதனால் உக்கிவிக்கப்படுகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை...!

நாம் விமானத்தில் பெரிய நேர வித்தியாசம் உள்ள இடங்களுக்கிடையில் பிரயாணம் செய்யும் போது இந்த இரண்டு மணிக்கூடுகளின் செயற்பாடுகளும் குழப்படுத்துக்கு உள்ளாகி உடற்தொழிற்பாடுகள் தற்காலிகமாக ஒமோன்களினால் கட்டுப்படுத்தப்படுவதாகவும்...இது மீண்டும் மூளை மணிக்கூடுகள் இயல்புக்கு வர உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது..! ஆனால் இவ்வாராய்ச்சி தொடர்பில் இன்னும் பல விளக்கப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்...!

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 2:03 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க