Tuesday, May 11, 2004

கடலோடு சங்கமம்....?!

இந்து சமுத்திரத்தை ஒட்டிய முருகைக்கற் பாறைகள் கொண்ட தீவுகளும் (Coral islands) வாழிடங்களும் பூமி வெப்பமாதல் விளைவின் காரணமாக விரைந்து அழிந்து வருவதாகவும் அவை மீள உற்பத்தியாகும் வேகமும் குறைவடைந்து வருவதாகவும் இந்து சமுத்திரப் பகுதியில் மேற்கொள்ளபட்ட ஆய்வுகளின் முடிவுகள் சுட்டிக் காட்டியுள்ளன...! இந்த முருகைக்கற் பாறைகள் (coral reefs)கொண்ட வாழிடங்கள் பல இன மீன்களினதும் மற்றும் பல கடல்வாழ் சிறிய உயிரினங்களினதும் வாழிடமாகத் திகழ்வதுடன் கடல் அலைகளால் நிகழும் மண்ணரிப்பைத் தடுக்கும் முக்கிய கூறாகவும் விளங்குகின்றன...! இந்த முருகைக்கற் பாறைகளை உருவாக்கும் உயிரிகள் உயர் வெப்பநிலையைத் தாங்கி வாழக்குடியவை அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது....!

பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துச் செல்லும்போக்கு நிகழுமாயின் கடல் வெப்பமுறுதலும் தொடர்ந்து, இன்னும் 50 வருடங்களில் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள பல முருகைக்கற் பாறைத் தீவுகள் கடலுடன் சங்கமமாகும் என்றும் இவ்வாய்வறிக்கை எச்சரிக்கிறது....!

மேலதிக தகவலுக்கு

பதிந்தது <-குருவிகள்-> at 6:15 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க