Tuesday, May 11, 2004

ஆயுட்கால விண்ணியல் விநோத தரிசனம்...!

122 வருடங்களின் பின் நிகழ இருக்கும் அரிய வானியல் நிகழ்வென்றை பூமியில் ஐரோப்பா, மத்திய கிழக்கு, பெரும்பாலான ஆசிய பகுதிகள், ஆபிரிக்கப் பகுதி வாழ் மக்கள் அடுத்த மாதம் (ஆனி -யூன் ) 8 ம் திகதி கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்களுக்கு அவதானிக்கலாம் என்று விண்ணியலாளர்கள் அறிவித்துள்ளனர்....! அது என்ன நிகழ்வு என்று அறிய ஆசையா...

எமது சூரியக் குடும்பத்தில் வெள்ளிக் கோள் சூரியனை கடக்கும் போது சூரியன் - வெள்ளி - பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும் நிகழ்வாகும்...இதன் போது பிரகாசமான வெள்ளிக் கோள் (கிரகம்) சூரியனின் மத்தியில் சூரியனுடன் (விட்டத்துடன்) ஒப்பிடும் போது 1/30 பருமனுடைய கறுத்தப் புள்ளியாக பூமியில் இருப்போருக்குத் தெரியும்....! இந்தக் காட்சியை வெற்றுக் கண்ணாலோ அல்லது தொலைக்காட்டிகள் ஊடோ அல்லது புகைப்படக் கருவிகளூடோ பார்க்கக் கூடாது என்றும் சூரியனைப் பார்க்க உதவும் விசேடித்த கண்ணாடிகள் கொண்டு அவற்றினூடாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது....! இப்படியான ஒரு நிகழ்வு முன்னர் மார்கழி ( டிசம்பர்) திங்கள் 6 ம் திகதி 1882 இல் நடந்திருக்கும் என்றும் இதே போல் அடுத்த நிகழ்வு ஆனி (யூன்) மாதம் 6 ம் திகதி 2012 இலும் நிகழும் என்றும் விண்ணியலாளர்கள் தெரிவித்துள்ளனர்...!

மேலதிக தகவலுக்கு

பதிந்தது <-குருவிகள்-> at 6:09 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க