Friday, May 14, 2004

புகை என்றும் எங்கும் நமக்குப் பகை...!

காற்று மாசுபடுதலுக்கு பிரதான காரணமாக விளங்கும் அனல் மின்சார உற்பத்தி மையங்கள் வெளியிடும் புகைகள், டீசல் வாகனப்புகைகள், தொழிற்சாலை வாயு நிலைக்கழிவுகள் ஆகியவற்றில் பிரதானமாக அடங்கும் கரும்புகைக்கழிவுகளைச் (soot) சுவாசிப்பதால் அதில் உள்ள இரசாயனக் கூறுகள் பரம்பரை நோய்களை விளைவிக்கக் கூடிய பரம்பரை அலகு (DNA) மாற்றங்களை பெற்றோரினூடு சந்ததிக்கு ஏறப்படுத்துவதாக உருக்குத் தொழிற்ச்சாலைச் சூழல் ஒன்றில் எலிகளை வைத்துச் செய்த ஆய்வு முடிவென்று கூறுகிறது...!

இந்த ஆய்வின் பிரகாரம் குறித்த நோய்களை விளைவிக்கக் கூடிய சந்ததிகளில் அவதானிக்கப்பட்ட பரம்பரை அலகு மாற்றம் (Mutation) என்பது தந்தையின் விந்தில் உள்ள பரம்பரை அலகில் வாழும் காலத்தில் ஏற்பட்ட பரம்பரை அலகு மாற்றங்களாலேயே நிகழ்ந்திருப்பதாக அவ்வாய்வு தொடர்ந்து சொல்கிறது....! தந்தை எலிகளில் இந்த பரம்பரை அலகு மாற்றம் ஏற்படுவதற்கு அவை மாசடைந்த காற்றைச் சுவாசித்ததன் மூலம் உள்ளெடுத நுண்மையான,நச்சு இரசாயனப் பதார்த்தங்களே காரணம் என்றும் இவ்வாய்வு சந்தேகிக்கிறது...எனினும் இவ்வாய்வை மேலும் விருவாக செய்வதன் மூலமே சரியான காரணிகளை இனங்கானவும் தெளிவான முடிவுகளை எடுக்கவும் முடியும் என்று இவ்வாய்வைச் செய்த கனேடிய ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவலுக்கு

பதிந்தது <-குருவிகள்-> at 12:07 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க