Sunday, May 16, 2004

விண்வெளிக்கு உல்லாசப் பயணம்....!

star_180.jpg

SpaceShipOne எனும் உந்து வாகனம் விண்ணை நோக்கிப் பாய்ந்து செல்லும் காட்சி

star_180.jpg

மேலே சொல்லப்பட்ட உந்து வாகனத்தின் பறப்புப் பாதையும் வழி முறையும்

Ansari X-prize எனும் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (£5.7m) பெறுமதி உள்ள பரிசைப் பெறும் நோக்கிலும் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் நோக்கிலும் அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்றினால் வடிவமைக்கப்பட்ட ஸ்பேஸ் சிப் வன்- விண்வெளிக்கப்பல் ஒன்று (SpaceShipOne )எனும் உந்து வாகனம் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 211,000 அடிகள்(64 கிலோ மீற்றர்கள்) உயரம் வரை ஆட்களுடன் (மனிதர்களுடன்) விண்ணில் பாய்ந்து சென்று அதன் சோதனைப் பறப்பொன்றில் வெற்றி கண்டுள்ளது...!

இச் சோதனை அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்தது. எனினும் இவ் உந்து வாகனம் குறிப்பிட்ட பரிசைப் பெறுவதற்கு மூன்று வாரங்களில் 329,000 அடிகள் (100 கிலோ மீற்றர்கள்) உயரத்தை இரு தடவைகள் ஆட்களுடன் பறக்க வேண்டும்.இன்னும் சில வாரங்களில் இவ்வுந்துவாகனம் இவ்விலக்கை எட்டத்தக்க வகையில் தன் பறப்பைச் செய்யும் என்று இதை தயாரித்த நிறுவனம் கூறியுள்ளது....அப்படி இவ்வாகனம் அதன் சாதனை இலக்கை எட்டுமானால் விண்வெளி உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு புதிய யுகத்தை இவ்வாகனம் மூலம் ஆரம்பித்து வைக்க முடியும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

மேலதிக தகவலுக்கு

பதிந்தது <-குருவிகள்-> at 6:53 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க