Friday, May 28, 2004

சாதனைக் குழந்தை...!

இவனுடைய அப்பாவுக்கு 17 வயதாக இருக்கும் (1979 இல்) போது,.... ஆண்களில் ஆண் அணுக்களை (விந்து) உற்பத்தியாக்கும்.... விதையில் புற்றுநோய் என்று அறியப்பட்டதும் அவரிடம் இருந்து பெறப்பட்ட விந்து மாதிரிகளை உறை நிலையில் பிரித்தானியாவில் உள்ள ஒரு விந்துகள் சேகரிப்பு மையத்தில் சேகரித்து வைத்தனர்....! பின்னர் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரும் குணமடைய, 1998 இல் அவருக்கும் அவரது துணைக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை வர விந்து சேகரிப்பு மையத்தை நாடி உள்ளனர். அவர்களுக்கு உதவி புரியும் நோக்கில் முளையவியல் நிபுணர்கள் குறிப்பிட்ட விந்து சேகரிப்பிடத்தில் இருந்து பெற்ற விந்துகளைக் கொண்டு பரிசோதனைக் குழாய்களில் முட்டையையும் விந்தையும் இணைத்து வைத்து முளையங்களை உருவாக்கி பின் அதில் ஒன்றை குறித்த ஆணின் துணையான பெண்ணின் கர்ப்பப்பையில் பதிய வைக்க 1998 இல் இருந்து பல முறை முயன்றும் அது தோல்வியில் முடிய இறுதியாக 2002 இல் குறித்த பெண் வெற்றிகரமான முளையப்பதிவை காண்பித்து இக்குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்...கிட்டத்தட்ட 21 வருடங்களாக உறை நிலையில் இருந்த விந்தில் (frozen sperm) இருந்து இக்குழந்தை பரிசோதனைக் குழாய்கள் பின் தாயின் கர்ப்பப்பை என்று பல இடங்கள் தாண்டி பிறந்துள்ளது...!

சரி... இது ஒரு சாதனைக் குழந்தை என்பது இருக்க... உங்களும் ஒரு தகவல்...சில ஆண்களுக்கு குழந்தைகளை இயற்கையான வழிமுறைகளின் கீழ் பெற்றுக் கொள்ளும் எண்ணிக்கையில் ஆண் அணுக்கள் காணப்படவில்லை என்றால் அவர்களால் குழந்தைகளை-- சந்ததிகளை... உருவாக்க முடியாத துரதிஷ்டம் வருவது இயல்பு....ஆனால் எனி அப்படியான ஆண்களும் விபத்துக்களுக்கு அல்லது ஆணின் விதையில் பெண்ணின் சூலகத்தில் நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் ஆண்களும் பெண்களும் முன் கூட்டியே தமது விந்துகளையும் முட்டைகளையும் பாதுகாத்து வைத்து பிற்காலத்தில் விரும்பிய நேரத்தில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் வழி வகைகளை பிரித்தானியா பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து கொடுக்க முடியும் என்றும் அது போக குறைந்தது ஒரு விந்தும் ஒரு முட்டையும் இருந்தாலே முளையத்தை வெற்றிகரமாக ஆக்க முடியும் என்றும் இந்தக் குழந்தையை உருவாக்கிய மனித முளையவியல் நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்...!

என்ன நீங்க ரெடியா விந்து அல்லது முட்டை வங்கியில் வைப்புச் செய்ய...சரி சரி நடக்கட்டும்...இதில் ஒன்றும் இல்லை வெட்கப்படுவதற்கு...இதெல்லாம் உயிரியலில் சாதாரண விடயங்கள்...!

மேலதிக தகவல் இங்கே..(ஆங்கிலம்)

பதிந்தது <-குருவிகள்-> at 12:31 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க