Tuesday, June 22, 2004

வரலாற்றுப் பறப்பு...!


SpaceShipOne (ஸ்பேஷ் சிப் வன் - விண்வெளிக்கப்பல் ஒன்று) உந்துவாகனம்


SpaceShipOne உந்துவாகனம் இன்னுமொரு உந்துவாகனக் காவி (White Knight) மூலம் எடுத்துச் செல்லப்படும் காட்சி


90 நிமிட நேர வரலாற்றுப் பறப்பின் பின் தரையிறங்கும் SpaceShipOne உந்துவாகனம்.

ஒரு செலுத்துனருடன் SpaceShipOne (ஸ்பேஷ் சிப் வன்) உந்து வாகனம் ஆனது அதன் சாதனை இலக்கான 100 km களை ( தரையில் இருந்து ஆகாயம் நோக்கி ) கிட்டத்தட்ட பூமியின் ஈர்ப்பு எல்லையின் கடைசி நிலை வரைக்கும் சென்று மீண்டும் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளது...இது ஒரு விண்வெளி நோக்கிய பறப்புகளில் புதிய வரலாற்றுப் பறப்பாகும்...இந்த உந்துவாகனம் இன்னுமொரு உந்துவாகனக் காவி (White Knight) மூலம் பூமியில் இருந்து சுமார் 15 km தூரம் வரை சென்றடைந்ததும் அங்கிருந்து தனது சொந்த ரொக்கட் இயந்திரத்தின் உந்துவிசை கொண்டு தனது பறப்பிலக்கை எட்டி மீண்டும் பூமி திரும்பி இருக்கிறது....!

இந்த SpaceShipOne எனும் உந்துவாகனம் தனியாருக்குச் சொந்தமானதும் aviation pioneer Burt Rutan எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதும் ஆகும்...இந்த நிறுவனம் ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும்....!

இந்தச் சாதனைப் பறப்பைச் செய்த விண்வெளிவீரரின் பெயர் Mr. Mike Melvill ஆகும்...!

மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்தவும்...ஆங்கிலம்

பதிந்தது <-குருவிகள்-> at 9:20 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க