Tuesday, August 17, 2004

விண்ணியல் விநோதங்கள்...2



Saturn's total tally of natural satellites to 33.

சூரியக் குடும்பத்தில் நம்ம பூமிக்கு ஒரு நிலாத்தான்.... ஆனா சனிக்கிரகத்துக்கு மொத்தம் 33 நிலாக்கள்....! தற்போது சனியை நெருங்கி அதை ஆய்வு செய்துவரும் கசினி (Cassini) விண்கலம் சமீபத்தில் கண்டு பிடித்த இரண்டு புதிய நிலாக்களும் இதனுள் அடக்கம்.

S/2004 S1 என்றும் S/2004 S2 என்றும் பெயரிடப்பட்டுள்ள அந்த இரண்டு நிலாக்களும் முறையே 3 மற்றும் 4 கிலோமீற்றர்கள் விட்டமுடைய சிறிய நிலாக்களாகும்....! அவை சனியின் மையத்தில் இருந்து 194,000km, 211,000km எனும் இடைத்தூரங்களில் நிலை கொண்டு சனியைச் சுற்றி வருகின்றன...!



The moons orbit between Mimas (above) and Enceladus

பதிந்தது <-குருவிகள்-> at 10:57 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க