Friday, August 06, 2004

புதன் கிரகத்துக்கு கிளம்பியது நாஸா விண்கலம்..!

புதன் கிரகத்துக்கு (மெர்க்குரி) மெஸெஞ்சர் என்ற விண் கலத்தை அமெரிக்க விண் ஆராய்ச்சி நிறுவனமான நாஸா அனுப்பியுள்ளது.வானிலை காரணமாக சில முறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த விண் கலத்கை ஏவும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுமார் 7 ஆண்டுகள், 7.5 பில்லியன் கி.மீ. தூரம் விண்ணில் பயணித்து இந்தக் கலம் புதன் கிரகத்தை அடையும்.

சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு அருகில் உள்ள கோள் புதன் கிரகமாகும். 286 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 2,442 பவுண்ட் எடையுள்ள செயற்கைக் கோள் நேற்று அமெரிக்காவின் டெல்டா 2 ரக ராக்கெட் மூலம் விண்ணிலி செலுத்தப்பட்டது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கெனாவரல் விண்வெளித் தளத்தில் இருந்து இந்த ராக்கெட் செலுத்தப்பட்டது.

கடந்த 1974, 75ம் ஆண்டுகளில் மெரைனர் என்ற செயற்கைக் கோள் புதன் கிரகத்தின் அருகே சென்று படம் பிடித்தது. 30 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் அடுத்த கலம் அந்த கிரகத்துக்கு அனுப்பப்படுகிறது.
புதன் கிரகத்தை சுற்றி வந்து படமெடுப்பதோடு அதன் தட்பவெப்பம், கோள் உருவான முறை ஆகியவை குறித்தும் மெஸெஞ்சர் கலம் ஆராயும்.
கோள்கள் தோன்றியபோது பூமியின் அளவில் இருந்ததாகக் கருதப்படும் புதன் கிரகம் இப்போது நிலாவை விட கொஞ்சம் பெரிய அளவில் தான் உள்ளது. கிரகம் சுருங்கியதன் காரணம் என்ன, சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் கதிர் வீச்சின் தாக்கத்தால் கிரகம் தேய்ந்து போனதா போன்ற நுட்பமாக ஆய்வுகளை மெஸெஞ்சர் நடத்தவுள்ளது.

கடும் வெப்பம் நிலவினாலும் புதன் கிரகத்தில் நீர் உறைந்து போய் இருப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, சூரிய ஒளி படாத அதன் உச்சி மற்றும் கீழ் பகுதிகளில் நீர் இருக்க வேண்டும் கருதப்படுகிறது.
பகல் நேரத்தில் இந்த கிரகத்தின் வெப்பம் 1,100 டிகிரியைத் தாண்டும். இரவில் அடியோடு குளிர்ந்து பூஜ்யம் டிகிரியைத் தொடும்.

இப்போது அனுப்பப்பட்டுள்ள மெஸெஞ்சர் செயற்கைக் கோள் வரும் 7 ஆண்டுகளில் 15 முறை சூரியனை சுற்றிவிட்டு, பூமியையும் ஒரு முறை நெருங்கிவிட்டு, வீனஸ் கிரகத்தை இருமுறை சுற்றிவிட்டே புதன் கிரகத்தை நெருங்கும்.

பூமியருகே இந்த செயற்கைக் கோள் வரும்போது, பூமியின் ஈர்ப்பு சக்தி, இதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி புதன் கிரகத்தின் ஈர்ப்பு சக்திக்குள் அனுப்பும்.
புதன் கிரகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இரும்பு தான் உள்ளதாகக் கருதப்படுகிறது.

Thanks: thatstamil.com and bbc.com

பதிந்தது <-குருவிகள்-> at 10:10 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க