Tuesday, October 19, 2004

புதிய கோள் ஒன்றின் உருவாக்கம்..!

நட்சத்திரங்களில் நிகழும் வெடிப்புகளால் எழும் திணிவுகளுக்கிடையே நிகழும் மொத்துகைகளின் மூலம் புதிய கோள்கள் உருவாகின்றன என்ற கொள்கையை விளக்கும் வகையிலான அவதானிப்பொன்றை விஞ்ஞானிகள் கண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன...! அதுமட்டுமன்றி இந்த முறையில் ஒரு புதிய கிரகம் (கோள்) உருவாக முன்னர் கணிப்பிட்டதிலும் பார்க்க கூடிய காலம் எடுக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது...!

நாசா தனது Spitzer Space Telescope எனும் தொலைநோக்கி கொண்டு நட்சத்திரம் ஒன்றைச் சுற்றிக்காணப்பட்ட தூசுத்திணிவின் அளவையும் பிரகாசத்தையும் அவதானித்த போது அது 100 தொடக்கம் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட பிரகாசமானதாகவும் வளர்ந்தும் இருப்பதை அவதானித்துள்ளது...! இதன் அடிப்படையிலேயே மேலுள்ள அனுமானம் பெறப்பட்டுள்ளது...!

பதிந்தது <-குருவிகள்-> at 8:39 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க