Thursday, December 02, 2004

ஐரோப்பா எதிர்நோக்கும் அபாயம்...!



ஐரோப்பாவில் மனிதனின் செயற்பாட்டால் (முக்கியமாக தொழிற்சாலைகள் ,வாகனங்கள்) வெளிவிடப்படும் பச்சை வீட்டு வாயுக்களின் (CO2, N2O,CH4 & etc) அளவு அதிகரித்ததன் காரணமாக சென்ற வருடம் எதிர்கொள்ளப்பட்ட கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை எதிர்காலத்திலும் தீவிரமடையும் என்றும் இதனால் அதிகளவு மேலதிக மரணங்கள் சம்பவிக்கும் என்றும் சீரற்ற பருவநிலைகள் நிலவும் என்றும்... இதனாலேயும் மக்கள் புகைப்பிடிக்காமலே சுவாசப்பைப் புற்றுநோய்க்கு அதிகம் ஆளாகின்றனர் என்றும் பிரித்தானிய ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகமும் மற்றும் வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது....!

கடந்த ஆண்டு கோடை காலத்தில் ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலைத் தாக்கம் நிழவியதும் உதாரணமாக சுவிஸ்லாந்தில் சூழல் வெப்பநிலை வழமையை விட 5 பாகை செல்சியஸ் அதிகரித்திருந்தது என்பதும் இதே போன்ற தாக்கங்கள் தொடர்ந்து பச்சைவீட்டு வாயுக்கள் வெளியிடப்படுவதால் அதிகரிக்கும் என்றும் மேலும் அவ்வாய்வறிக்கை சொல்கிறது...!



பச்சைவீட்டு வாயுக்கள் (Mainly CO2) சூரிய வெப்பக் கதிர்கள் பூமியில் அடைந்து மீளக் காழப்படும் போது அகத்துறிஞ்சி மீண்டும் சூழலுக்கு வெப்ப அலைகளைக் காழுவதாலேயே வெப்பநிலை அதிகரிப்பு ஏற்படுகிறது...! சூழலில் பச்சைவீட்டு வாயுவான CO2 வெளிவிடப்படும் அளவை இப்படம் காட்டுகிறது...உலகளாவிய ரீதியில்...ஆண்டுடன்....!

மேலதிக தகவலுக்கு.. ஆங்கிலம் - bbc.com & eia.doe.gov

பதிந்தது <-குருவிகள்-> at 10:12 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க