Sunday, December 26, 2004

பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி ஆசிய உலகம்...!



இந்தோனிசியாவுக்கு அருகில் கடலில் மையம் கொண்டெழுந்த பயங்கர நிலநடுக்கத்தால் உருவான பாரிய கடல் கொந்தளிப்பு மற்றும் பேரலைத் தாக்கங்களுக்குள் சிக்கி ஆசிய பசிபிக் நாடுகள் சில பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன....!

குறிப்பாக தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலத்த உயிர் உடைமைச் சேதங்களைச் சந்தித்துள்ளன...! அதிலும் குறிப்பாக இலங்கை மற்றும் தென்னிந்திய கரையோரங்கள் கடல்கொந்தளிப்பால் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன...! பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் பல கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன...!

கடந்த 40 வருடங்களில் உலகில் நிகழந்த மிகப்பெரிய பூகம்பம் இது என்றும், 8.9 magnitude அளவு கொண்டதாகவும், 1900க்குப் பின்னர் நிகழ்ந்த ஐந்தாவது பாரிய பூகம்ப நிகழ்வு இது என்றும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன...!

நெஞ்சை உலுக்கும் இந்த இயற்கைப் பேரழிவால் அவதியுறும் மக்களுக்கு உலகெங்கும் இருந்து உதவிகளை வழங்கி ஆதரவுக் கரம் நீண்ட எமது வலைப்பூ சார்பாகவும் வேண்டுகின்றோம்....!

Source - bbc.com

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:07 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க