Tuesday, December 14, 2004

புவியில் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாடு



தொழிற்சாலைகளினால் மாசு ஏற்படுகிறது.

புவியின் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. அமைப்பின் வருடாந்திரக் கூட்டம் அர்ஜெண்டினாவின் தலைநகரம் புயினோஸ் எய்ரிசில் நடந்துவருகிறது. இந்த ஐ.நா. அமைப்பில் அரசில் கொளகைகளை வகுப்பவர்கள் மட்டுமின்றி காலநிலை மாற்றங்களை அவதானித்துவரும் விஞ்ஞானிகளும் இடம்பெற்றுள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகள் எடுக்கவேண்டிய முடிவுகள் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் இடையில் கடும் கருத்து வேற்றுமைகள் இப்போதும் நிலவுகிறது என்றாலும். காலநிலை மாற்றம் என்ற பிரச்சினையின் தன்மை அதன் காரணிகள், அதன் விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் இடையிலான கருத்து வேற்றுமைகள் இப்போது பெரிதும் மறைந்துவிட்டன.

இது ஒரு மிகப்பெரிய பிரச்சினை என்பதையும், மனித செயற்பாடுகள்தான் காலநிலை மாற்றத்தைத் தோற்றுவிக்கின்றன என்பதையும், இதனால் எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களால் பெரும் ஆபத்துகள் தோன்றும் என்பதையும் அனைத்து விஞ்ஞானிகளும் இப்போது ஏற்ற்க்கொள்ளத் துவங்கிவிட்டனர்.

புயினோஸ் எய்ரிஸ் மாநாட்டில் அமெரிக்கத் தரப்பில் ஒரு பத்தாண்டுத் திட்டம் முன்வைக்கப்படுகின்றது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு காலநிலை மாற்றங்களை உலகெங்கிலும் அவதானித்து தகவல் சேகரித்து அதன்பிறகு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது என்பது அது.

ஆனால் காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தேவையான அரசியல் கொள்கைகளை வகுப்பதற்கு தகவல் சேகரிப்பு மட்டும்போதாது அதற்கு அரசுகளின் எண்ணம் வேண்டும் உறுதிப்பாடு வேண்டும் என்கிறார் எமது செய்தியாளர் எலிசபெத் பிளண்ட்.

தகவல் பிபிசி தமிழ் - source : www. bbc.com/tamil

பதிந்தது <-குருவிகள்-> at 8:23 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க