Wednesday, December 22, 2004

மொபைல் போன்கள் தரும் ஆபத்து...!



செல்லிடத் தொலைபேசிகளைப் (Mobile Phone) பயன்படுத்தும் போது வெளிவரும் மின்காந்த அலைகள் (Electro magnetic waves) உடலில் உள்ள உயிர்கலங்களையும் அவை கொண்டுள்ள பிறப்புரிமையியல் கூறான டி என் ஏ (DNA) யையும் மீளமுடியா பாதிப்புறச் செய்வதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் தாம் மேற்கொண்ட முதற் கட்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர். டி என் ஏ யில் ஏற்படும் மாற்றம் புற்றுநோய் தோன்றுவற்கான சாத்தியக் கூறுகளை வழங்கலாம் என்றும் அவ்வாய்வு மேலும் சொல்கிறது....!

தொலைபேசி பாவிப்பவர்கள் சாதாரண வீட்டுத் தொலைபேசிகளை (Land line) அதிகம் பாவிக்க நாடுவதே சிறந்தது என்றும் செல்லிடத் தொலைபேசிகளில் இருந்து வெளிவிடப்படும் மின்காந்தளவின் அடிப்படையிலேயே - (The radiation used in the study was at Specific Absorption Rate (SAR) levels of between 0.3 and 2 watts per kilogram.The SAR is the rate at which the body absorbs emissions from the phone handset.Most phones emit radio signals at SAR levels of between 0.5 and 1 W/kg)- இந்த ஆபத்து உருவாகச் சாத்தியம் உள்ளதாகவும் கூறியுள்ள விஞ்ஞானிகள், சிறுவர்கள் குழந்தைகள் இவற்றை அதிகம் பாவிப்பதைத் தவிர்ப்பது நல்லதெனவும் பரிந்துரைத்துள்ளனர். எனினும் இது ஒரு தீர்க்கமான ஆய்வு முடிவல்ல என்றும் ஆரம்ப ஆய்வு முடிவே என்றும் கூறியுள்ள விஞ்ஞானிகள் மேலும் பலதரப்பட்ட கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர்....!

உலகில் சுமார் 1.5 பில்லியன் மக்கள் செல்லிடத் தொலைபேசிகளைப் தற்போது பாவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...!

------------------------------

Mobile phones 'alter human DNA'

The four-year Reflex study, co-ordinated by the German research group Verum, studied the effects of radiation on animal and human cells in a laboratory.

They found that, after being exposed to electromagnetic fields, the cells showed a significant increase in DNA damage which could not always be repaired by the cell.

Damage was also seen in the next generation of cells. Mutated cells are seen as a possible cause of cancer.

The study, which has not been published in a journal, also reported other harmful effects on cells.

source - bbc.com

மேலதிக தகவல் - ஆங்கிலம்

பதிந்தது <-குருவிகள்-> at 1:47 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க