Tuesday, January 04, 2005

செவ்வாயில் அந்த நாட்கள் - ஸ்பிரிற் ரோவர்...!



கடந்த ஆண்டு அமெரிக்க நாசா விண்ணியல் ஆய்வு நிறுவனம் சார்பில், செவ்வாயை ஆய்வு செய்யச் சென்ற இரண்டு ரோவர்களில், முதலாவது ரோவரான ஸ்பிரிற் ரோவர் (Spirit Rover) செவ்வாயில் தரையிறங்கி செவ்வாய் பற்றிய அரிய படங்களையும் தகவல்களையும் பூமிக்கு அனுப்பி வைத்து சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களில் ஒப்பசுனிற்றி ரோவர் (Opportunity Rover) தானும் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கி மேடுகள் பள்ளத்தாக்குக்கள் என்று ஓடித் திரிந்து, செவ்வாயில் உயிரினங்களினதும் நீரினதும் இருப்புப் பற்றி பல அரிய ஆய்வுகளைச் செய்தது. அதில் கோதைற் (goethite) எனும் நீர் பிரசன்னமாக உள்ள போது மட்டும் உருவாகி இருக்கக் கூடிய கனியத்தை செவ்வாயின் தரைப்படையில் கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அதைவிட இரண்டு ரோவர்களினதும் செயற்பாடுகளும் 90 நாட்களுக்கும் மேலாக செவ்வாயில் இருந்தது என்பதும் ஒரு விசேட அம்சமாகும்...!

இவை யாவும் பழைய செய்திகள்...புதுச் செய்தி என்ன தெரியுமா...கடந்த மூன்றாம் திகதி... ஸ்பிரிற் ரோவர் செவ்வாயில் தரையிறங்கி சாதனை படைத்த ஓராண்டு நிறைவு நாளை... விஞ்ஞானிகள் நினைவு கூர்ந்து சிறப்பித்தனர் என்பதுதான்...!



செவ்வாயில் இதுவரை தரையிறங்கிய ரோவர்களும் அவை தரையிறங்கிய இடங்களும் ஆண்டுகளும் படத்தில் தரவுகளாகத் தரப்பட்டுள்ளது...!

செவ்வாய் பற்றிய விசேட இணைப்பு...!

மேலதிக தகவல் இங்கு

நன்றி - bbc.com

பதிந்தது <-குருவிகள்-> at 10:21 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க