Sunday, January 16, 2005



அமெரிக்கப் போரியல் உக்திக்கு எல்லையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது போல் தெரிகிறது...!

அமெரிக்க அரசுப் பத்திரிகை ஒன்றை ஆதாரம் காட்டி பிபிசி வெளியிட்டுள்ள செய்தியின் பிரகாரம் தன்னினச் சேர்க்கை எனும் துர்நடத்தையை எதிரிப் படை வீரர்களுக்கிடையில் தூண்டக் கூடிய இரசாயனப் பொருளைக் கொண்டு குண்டுகளை வடிவமைக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்க இராணுவ விஞ்ஞானிகள் 1994 திட்டம் எனும் திட்டம் மூலம் ஈடுபட்டு வரும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது...!

இத்தகைய குண்டுகள் மூலம் எதிரிப் படைவீரர்கள் மத்தியில் கெட்ட நடத்தைகளைத் தூண்டிவிட்டு அவர்களின் மனநிலையைக் குழப்பி போரியல் தந்துரோபாயங்களைத் தகர்த்து அமெரிக்கப் படைகளுக்கு இலகு வெற்றிகளை ஈட்டிக் கொடுக்கும் முகமாகவே இவ்வகையாராச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவாம்...! இதற்கு பல துறைசார் விஞ்ஞானிகளின் உதவிகள் பெறப்பட்டு வருவதுடன் மில்லியன் கணக்கான டொலர்களும் செலவிடப்படுகின்றனவாம்...!

இத்தகைய குண்டுகள் வடிவமைக்கப்பட்டு போர்ப் பிராந்தியங்களில் பிரயோகிக்கப்பட்டால் அவை நேரடியாக உயிருக்கு ஆபத்து விளைவிக்க விட்டாலும் மனித சமூகக் கட்டமைப்பை ஒழுக்கத்தைச் சிதைத்து பாரிய மனிதச் சீரழிவுகளை உண்டு பண்ணக் கூடும்...! மேற்குலகில் தன்னினச் சேர்கை என்பது அதிகரித்து வரும் ஓர் துர்நடத்தை என்பதற்கும் இந்த ஆராய்ச்சிகளுக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகிக்க வேண்டிய நிலையில் இன்று உலகு இருக்கிறது...!

ஏற்கனவே எயிட்ஸ் வைரஸ் கூட அமெரிக்க உயிரியல் ஆயுத ஆய்வுகூடம் மூலமே உருவாக்கப்பட்டதாகவே இன்றும் பெரிதும் சந்தேகிக்கப்படுகிறது...!

மேலதிக தகவல் இங்கு..!

பதிந்தது <-குருவிகள்-> at 9:41 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க