Sunday, January 16, 2005

ரைரன் பற்றிய பரபரப்புச் செய்திகள்...!



ரைரனின் தரைத் தோற்றம் பற்றிய வர்ணப்படம்...!

சனிக்கோளின் பெரிய உப கோளான ரைரனை ஆராயச் சென்ற Huygens probe ரைரனில் தரையிறங்கிய போது ரைரனின் மேற்பரப்பில் காணப்பட்ட களித்தன்மையான ( creme brulee ) ஒப்பீட்டளவில் மெல்லிய படையில் புதையுண்டதாகவும் ரைரன் மெதேன் (Methane) எனும் ஐதரோ காபன் சேர்வை மிகுந்த ஒரு உலகமாக காணப்படுவதாகவும் தரை போன்ற திண்மப்பரப்பில் உறைநிலைத் திண்மப் பதார்த்தங்கள் காணப்படுவதாகவும் கடல் போன்ற இருண்ட பகுதியில் தார் (tarry substance) போன்ற பதார்த்த நிலை தென்படுவதாகவும் அதுமட்டுமன்றி தரைப்படையை சூழ்ந்து மெதேன் fog திரண்டிருப்பது போலவும் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...!

ரைரனின் மேற்பரப்பில் காணப்படும் தரை போன்ற பகுதிக்கும் தார் போன்ற கடலுக்கு ஒத்த பகுதிக்கும் இடையில் உள்ள இடத்தில் நீரோடைகள் ஓடியதற்கு ஒத்த வடிகாலமைப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...!

ரைரனின் தரை வெளிர் செம்மஞ்சள் ( bright orange) நிறமாகவும் வான் கடும் மஞ்சள் கலந்த செம்மஞ்சள் (Tangerine ) நிறமாகவும் காணப்படுவதுடன் வாயு மண்டலம் வாயு அசைவுகளைக் கொண்டிருப்பதாகவும் பலத்த ஒலி அலைகளை எழுப்பிய வண்ணம் இருப்பதாகவும் இது இடிமின்னலுக்கு ஒத்ததாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் மேலும் கருத்துரைத்துள்ளனர்...!

ரைரனில் தரையிறங்கி கிட்டடத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் வரை உயிர்ப்புடன் செயற்பட்ட (Huygens) கலம் அனுப்பிய மொத்தத் தகவல்களில் சரி பாதித் தகவல்கள் இழக்கப்பட்டிருப்பதாகவும் இதற்கு அடர்ந்த உறுதியான ரைரனின் வாயு மண்டலமும் பலத்த வாயு அசைவுகளும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்...!

ஐரோப்பிய விண்ணியல் ஆய்வு நிறுவன (ESA) வடிவமைப்பான Huygens கலம் அதன் தாய்க்கலமும் நாசாவின் (NASA) தயாரிப்புமான கசினியினூடே இத்தகவல்களை பூமிக்கு பல நூறு மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து அனுப்பிக் கொண்டிருக்கிறது...! இப்படி வந்து சேர்ந்த, சேரும் தகவல்களில் இன்னும் பலது படிக்கப்பட வேண்டி இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...!

பெறப்பட்ட தரவுத் தகவல்களின் படி ரைரனில் காணப்படும் மெதேனின் அளவின் அடிப்படையில்... அது...4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் இருந்ததற்கு ஒப்ப இருப்பதாகவும் இதனடிப்படையில் நோக்கின் பூமியில் எவ்வாறு உயிரினங்கள் தோன்றின என்பது பற்றி ஆய்வு செய்ய சில வசதியான தரவுகள் கிடைக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...!

தகவல் மற்றும் பட ஆதாரங்கள் - Sources...bbc.cm, Reuters Science, AP Science and NASA.com

மேலதிக தகவல் இங்கு...!

பதிந்தது <-குருவிகள்-> at 1:00 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க