Saturday, January 22, 2005

கபிள் தப்பிப்பிழைக்குமா..??!



Hubble (கபிள்) விண்ணியல் தொலைநோக்கி..!

விண்ணியல் விநோதங்களை பற்றிய அரிய படங்களை எடுத்து எமக்குக் காட்டிய, நாசாவின் விண்ணில் சஞ்சரிக்கும் அதிசக்தி தொலைநோக்கியான கபிளைப் பழுதுபார்க்கவும் புதிய பகுதிகளைப் பொருத்தவும் நாசா தீட்டியிருந்த திட்டம் அமெரிக்க அரசு அதற்கான செலவுத் தொகையை (கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர்கள்) தரமறுத்துள்ளதால் கேள்விக் குறியாகி உள்ளது...! கபிள் முன்னரும் பல தடவைகள் விண்வெளிவீரர்களாலும் ரோபாக்களாலும் பழுது பார்க்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது..!

15 வருட சேவைக்காக அனுப்பப்பட்டு 2010 வரையான இருபது ஆண்டுகள் கால சேவைக்காக மாற்றியமைக்கப்பட கபிளை நாசா கைவிட்டால் அதன் சேவை என்பது இன்னும் சிறிது காலத்துக்கே எமக்குக் கிடைக்கும்...அதன் பின் விண்ணியல் பற்றிய அரிய படங்களுக்கும் அவதானிப்புக்களுக்கும் தரையில் உள்ள தொலைநோக்கிகளையே பெரிதும் நம்பியிருக்க வேண்டிவரும்...!

மேலதிக தகவல் இங்கு...!

பதிந்தது <-குருவிகள்-> at 11:15 pm

3 மறுமொழிகள்:

Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady விளம்பியவை...

Hubble - ஹபில்லை கபில்ன்னு சொல்லரது கொஞ்சமும் நியாயம் இல்லைங்க...

Sun Jan 23, 06:32:00 am GMT  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady விளம்பியவை...

In Unicode you need to type -ha for (ஹ) - use http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm.

Sun Jan 23, 06:34:00 am GMT  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady விளம்பியவை...

In Unicode you need to type -ha for (ஹ) - use http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm.

Sun Jan 23, 06:34:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க