Saturday, January 15, 2005

ரைரனை ஆராயும் Huygens உப கலம் அனுப்பிய படங்கள்..!



ரைரனின் மேற்பரப்பில் அழுத்தப் பாறைத்திட்டுக்கள் போன்று திணமங்கள் பரந்திருக்கும் காட்சி..!

சனிக்கோள் மற்றும் அதன் உப கோளான ரைரனை ஆராயச் சென்ற கசினி விண்கலம் அனுப்பிய Huygens எனும் சிறிய கலம் ரைரனின் வளிமண்டலத்தினூடு பயணித்த போது ரைரனின் மேற்பரப்பில் இருந்து 16.2, 8 கிலோமீற்றர்கள் (km) உயரத்தில் இருந்தும் அதன் தரை மேற்பரப்பில் இருந்தும் எடுத்த ரைரனின் மேற்பரப்புத் தோற்றங்கள் பற்றிய படங்கள் பூமிக்குக் கிடைத்துள்ளன...! இவை தவிர ரைரன் பற்றி கிட்டத்தட்ட சுமார் 300 படங்களை இக் கலம் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது...!



ரைரனின் மேற்பரப்பில் காணப்படும் கறுப்புத் திரவ மற்றும் சாம்பல் வர்ண திண்மக் கரையும்...! திண்மக்கரையை அண்டிக் காணப்படும் பாறைத்திட்டுக்களும்..!



ரைரனில் Huygens probe இறங்கிய இடம் இருக்கத்தக்க தோற்றம்..!

தற்போது பகுப்பாய்வு செய்யப்பட்ட Huygens space probe அனுப்பிய கறுப்பு வெள்ளைப் படங்களின் அடிப்படையில் கறுப்பு நிற திரவப்படையை அண்டிய திண்மக் கரையையும் அங்கு திரவ ஓடைகள் ஓடியதற்கான தோற்றத்தையும் அழுத்தமான பாறைத்திட்டுக்கள் திண்மப் பரப்பில் பரந்திருப்பதையும் விஞ்ஞானிகள் இதுவரை இனங்காட்டியுள்ளனர்...! இந்தப் படங்களும் இன்னும் உள்ள படங்களும் இதர தரவுகளும் மேலும் ஆய்வுக்கு உட்படும் போது ரைரன் பற்றிய மேலும் சுவாரசியத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கிறார்கள் விண்ணியல் ஆர்வலர்கள்...!



ரைரனை ஆய்வு செய்யும் விண்கலங்களின் (cassini and huygens space probe)பழைய நிலைகள்..!

(The Cassini-Huygens mission is a cooperative project of NASA, the European Space Agency and the Italian Space Agency.)

மேலதிக தகவல் இங்கு...!

இது தொடர்பான நாசாவின் செய்திகள் இங்கு...!

Images from Reuters,AP ,BBC.com and Nasa - Our Thanks for them...!

பதிந்தது <-குருவிகள்-> at 1:43 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க