Friday, January 14, 2005

ரைரனில் (Titan) தரையிறங்கும் நிலையில் Huygens



ரைரனில் Huygens கலம் தரையிறங்குவது போன்று வடிவமைக்கப்பட்ட படம்..!

சனிக்கோளின் உபகோளான ரைரனைச் (Titan) சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் கசினி (Cassini) எனும் செயற்கைக்கோள் அனுப்பிய Huygens எனும் சிறிய கலம் (Spacecraft) ரைரன் நோக்கிய கடந்த 20 நாட் பயணத்தின் பின்னர் தற்போது அதன் வாயு மண்டலத்தினூடு வெற்றிகரமாகப் பயணித்து ரைரனின் மேற்பரப்பை அடையும் நிலைக்கு எட்டியுள்ளது...!

இது பரசூட்களின் உதவியுடன் ரைரனின் மேற்பரப்பில் இன்னும் சில மணி நேரங்களில் தரையிறங்க உள்ள நிலையிலும் உயிர்ப்புள்ள நிலையில் இருந்து தகவல் சமிக்கைகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக பூமியில் இதைக் காண்காணிக்கும் நிலையங்களில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...!

இந்த கலம் எடுக்கும் படங்கள் ஒலிப்பதிவு செய்யும் ஓசைகள் மற்றும் செய்யும் ஆய்வுகள் சனிக்கோள் மற்றும் ரைரன் பற்றிய பல அரிய தகவல்களையும் ரைரனின் மேற்பரப்பு திண்மமா திரவமா என்று அறியவும் உதவி செய்யும் அதேவேளை...அதன் இராசாயனக் கட்டமைப்புக்கள் தொடர்பான விபரங்களையும் தெளிவாக அறிய உதவும் என்றும் பூமி மற்றும் சூரியக் குடும்பம் பற்றிய அரிய தகவல்களைப் பெறவும் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்...!

கலம் ரைரனில் தரையிறங்கும் முறையை இங்கு அழுத்திப் பார்வையிடலாம்...!

மேலதிக தகவல் இங்கு bbc.com

பதிந்தது <-குருவிகள்-> at 1:18 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க