Tuesday, April 05, 2005

மனிதரைப் போல சிரிக்கும் விலங்குகள்...?!



இவ்வளவு காலமும் மனிதனுக்கு மட்டுமே தனித்துவம் என்று எண்ணப்பட்டிருந்த சிரிப்பு எனும் பழக்கம்... விலங்குகளினுள்ளும் கூட வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுவதாக அமெரிக்க நரம்பியல் நிபுணர்கள் சிம்பன்சி நாய் மற்றும் எலிகளில் மேற்கொண்ட ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்...!

குறிப்பாக நாய்கள் சிம்பன்சிகள் எலிகள் தமக்குள் தாமே விளையாடும் போது மனித சிரிப்பை பிரதியீடு பண்ணக் கூடிய ஒலியை எழுப்புவதோடு... மனித மூளையில் சிரிப்புக்கு இடமளிக்கும் மூளைப்பகுதிகள் விலங்குகளின் மூளையிலும் அவதானிக்கப்பட்டுள்ளன..! அதுமட்டுமன்றி அவை மனித சிரிப்புச் செயன்முறையின் போது ஏற்படும் மூளை இரசாயன மாற்றத்துக்கு ஒத்த மாற்றத்தைக் காண்பிப்பனவாகவும் இருக்கின்றன...!

இதன் மூலம் விலங்குகளுக்கும் தனித்துவமான முறையில் சிரிக்கும் இயல்புகள் அமைந்திருக்கலாம் என்பது உணரப்பட்டுள்ளது...!

மேலதிக தகவல்..!

பதிந்தது <-குருவிகள்-> at 9:29 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க