Wednesday, April 06, 2005

மீண்டும் விண் ஏகும் அமெரிக்க விண்ணோடம்...!



ஜோன் கெனடி விண்வெளி நிலையத்தில் டிஸ்கவரி (Discovery)விண்ணோடம்..!

அமெரிக்க நாசாவின் கொலம்பிய விண்ணோடம் 2003 இல் விபத்துக்குள்ளான பின் நாசாவின் இன்னொரு விண்ணோடமான டிஸ்கவரி இவ்வருடத்தில் மே 15 க்கும் யூன் 3 க்கும் இடையில் விண்ணுக்குச் செலுத்தப்பட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன....! இதற்குள் அது விண்ணுக்குச் செலுத்தப்படாவிட்டால் யூலை நடுப்பகுதி வரை அது தன் விண் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கக் காத்திருக்க வேண்டும்...!

இம்முறை டிஸ்கவரி விண்ணுக்குச் செலுத்தப்படும் போது பல கோணங்களிலும் கமராக்கள் கொண்டு அது கண்காணிக்கப்பட உள்ளதாம்....! கொலம்பிய விண்ணோடம் கடைசியா செலுத்தப்பட்ட போது வெடிப்பின் போது உருவாகும் மீதி (chunk of foam ) ஒன்று அதன் இடது இறக்கையைச் சேதப்படுத்தியதே அது மீள் வருகையின் போது வானில் வெடித்துச் சிதற ஏதுவாக அமைந்திருந்தது...!

7 விண்வெளி வீரர்களைப் பலி கொண்ட கொலம்பிய விண்ணோட விபத்துக்குப் பின்னர் சர்வதேச விண்ணியல் நிலையத்துக்கான அனைத்து வளப்பரிவர்த்தனைகளையும் ரஷ்சியாவே வழங்கி வருகிறது....!



விபத்துள்ளான கொலம்பிய விண்ணோடம்..!



தற்போது பாவனையில் இருக்கும் விண்ணோடங்களுக்கு பிரதியீடாக 2012 இல் இருந்து பயன்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள ஒபிரல் ஸ்பேஸ் பிளேன் (Orbital Space Plane (OSP)) மாதிரி...!

மேலதிகள் தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 5:54 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க