Wednesday, April 06, 2005

மது அருந்தும் பெண்களே, ஆண்களே கவனியுங்க.!



குடிகாரப் பெண்களே...தாய்மாரே உங்களுக்கு ஓர் அபசகுனமாக வந்திருக்கிறது அமெரிக்க ஆராய்ச்சி முடிவு...!

இன்று பிபிசி பிரசுரித்துள்ள Journal of Clinical Endocrinology and Metabolism இன் செய்தியின் பிரகாரம் சிறிதளவு அற்ககோலே பெண்களில் பால் சுரப்பு அவசியமான ஒக்சிரோஜன் மற்றும் புறோலக்ரின் ஆகிய ஓமோன் சுரப்புக்களின் அளவைப் பாதித்துப் பால் சுரப்பைபின் அளவைக் குறைக்கிறது என்று...! அதுமட்டுமன்றி உள்ளெடுக்கப்படும் அற்ககோல் பாலுடன் கலந்து பிள்ளைக்கும் காவப்படுவதால் சிறிய அளவு அற்ககோல் கூட குழந்தைகளில் உடற் பாதிப்புக்களுக்கு வழிவகுக்கக் கூடும் என்றும் அறியத்தரப்பட்டுள்ளது...!

இதனால் பெண்கள் குடிக்கிறதைத் தவிர்க்கிறது சிறந்தது...இதிலும் சமத்துவம் கேட்காதீர்கள்... உங்களின் வாரிசுகளின் எதிர்காலம் கருதி...!

பிரித்தானியாவில் பாலூட்டும் தாய்மார் சிறிதளவு வைன் சாப்பிடலாம் என்ற பரிந்துரைக்களுக்கு இக்கண்டுபிடிப்பு சவாலாக அமைந்துள்ளது....!

Alcohol 'bad for breastfeeding'

Drinking alcohol impedes breast milk release, experts warn

Breastfeeding mothers who drink alcohol do not produce as much milk for their babies, a US study says.


-----------------------




குடிகாரப் பெருமக்களே... உங்களுக்கு அற்ககோலைக் குடிக்கும் போது ருசியும் குசியும் வரவது போல் உள்ளதா..அதைத் தடுத்து அற்ககோல் மீது உள்ள காதலை வெறுக்கப்பண்ண ஒரு ஊசி மருந்தை அமெரிக்க உயிரியல் மருத்துவ நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்...!

Naltrexone எனும் மருந்தை ஊசி மூலம் செலுத்துவதன் மூலமும் அற்ககோல் பாதிப்பு பற்றி தொடர் ஆலோசனைகள் வழங்குவதன் மூலமும் உங்களுக்கு உள்ள இந்த அற்ககோல் மீதான காதல் வெறியில் இருந்து மீட்சி கிடைக்க வழிகாட்ட முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்...!

Injection 'hope' for alcoholics

Alcoholics could be helped to stop drinking by monthly injections of naltrexone, say US scientists.

Trials of 627 people showed jabs could reduce heavy drinking when combined with counselling, the Journal of the American Medical Association said.

Naltrexone is thought to reduce the pleasurable effects associated with drinking by blocking receptors in the brain linked to euphoria.

The jab - the first of its kind - has been welcomed by some experts.



ஆதார இணைப்பு - 1

ஆதார இணைப்பு - 2

பதிந்தது <-குருவிகள்-> at 9:17 pm

1 மறுமொழிகள்:

Blogger Thangamani விளம்பியவை...

உங்கள் வலைப்பதிவு மிக அழகானதாகவ்வும், பயனுள்ளதாகவும், தொடர்ந்தும் பதியப்படுகிறது. நன்றிகள்.

//இதிலும் சமத்துவம் கேட்காதீர்கள்...//

இதுபோன்ற வரிகளைத் தவிர்க்கலாம்.

Wed Apr 06, 11:44:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க