Saturday, April 30, 2005

கழிவுகளின் கண்காட்சி...!



பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சவுத் பாங் என்னும் இடத்தில் வீட்டுப் பாவனையில் இருந்து விலக்கப்பட்ட மின்னியல் மற்றும் இலத்திரனியல் கழிவுப் பொருட்களைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள ஏலியன் (வேற்றுக் கிரகவாசி) வடிவம்...! இதன் எடை கிட்டத்தட்ட 3 தொன்களாகும்...!

இதை உருவாக்க பயன்படுத்தப்பட்ட முக்கிய கழிவுப் பொருட்கள் வருமாறு...

(1) PC screens; (2) printers; (3) industrial lights; (4) satellite dishes; (5) computer mice; (6) toasters; (7) vacuum cleaners; (8) heaters; (9) washing machines; (10) microwaves

உலகில் இவ்வகைக் கழிவுகளின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் அவை சூழற் சீர்கேடுகளை விளைவிப்பதிலும் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது...! இதனைக் கருத்திற் கொண்டு பாவனையாளர்களினதும் உற்பத்தியாளர்களினதும் விசேட கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் மீள் சுழற்சிப்படுத்தல் மற்றும் மீள் பயன்பட்டை ஊக்கிவிக்கும் முகமாகவும் இவ்வடிவம் உருவாக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது...!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 7:49 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க