Sunday, May 08, 2005

மனிதப் பெண்ணின் முட்டை உற்பத்தி...!



சூலக மேலணி சார்ந்து உருவாக்கப்பட்ட எளிய நிலை முட்டைக்கலங்கள்..!

பிறக்கும் போது ஒரு பெண் இரண்டு மில்லியன் முட்டைகளை உருவாக்கவல்ல சூலக முதன்னிலை முட்டைப் புடகங்களுடன் பிறந்தாலும் பூப்படையும் போது வெறும் 0.4 மில்லியன் மட்டுமே வளமான முட்டைகளை உருவாக்கும் தகுதியுடன் இருக்கும்...! அதிலும் சில நூறு முட்டைகளையே அவள் தன் வாழ்க்கைக் காலத்தில் உருவாக்குகிறாள்..! குறிப்பாக பெண்களில் ஏற்படும் இயற்கையான menopause பிறகு அவர்களால் வளமான முட்டைகளை உருவாக்கும் தகுதி இழக்கப்பட்டுவிடும்...!

சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சூலக மேலணிக்குரிய முட்டை மூலவுயிர்க் கலங்களில் இருந்து பெண்ணின் முட்டையை பிரதியீடு செய்யக் கூடிய கலங்களை ஆய்வுசாலை வளர்ப்பூடகங்கள் கொண்டு உற்பத்தி செய்துள்ளனர்...! இதன் மூலம் முட்டை உற்பத்தி குறைந்த பெண்களுக்கும் முட்டை உற்பத்தி தடைப்படும் பெண்களுக்கும் முட்டைகளை வழங்கி அவர்களுக்கான இனப்பெருக்கும் தகுதியை பல வருடங்களுக்கு நீட்டிக்க முடியும் என்று அமெரிக்க முளையவில் ஆய்வாளர்கள் கூறிகின்றனர்...!

மேலதிக தகவல்

பதிந்தது <-குருவிகள்-> at 4:37 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க