Sunday, May 08, 2005

கருத்தடை மாத்திரைகளின் சுயரூபம்...!



பெண்கள் உள்ளெடுக்கும் கருத்தடை மாத்திரைகளில் உள்ள ethinylestradiol எனும் இரசாயனக் கூறும் உணவுப் பண்டங்களை அடைக்கப்பயன்படும் பிளாஸ்ரிக் பாத்திரங்கள் கொண்டுள்ள bisphenol A எனும் இரசாயனக் கூறும் கருப்பையில் வளரும் எலிக்குஞ்சுகளின் சிறுநீர்ப் பாதையில் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்கான் பகுதிகளில் குறைபாடுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவென்றி அறியத்தந்திருக்கிறது...! இதே கூறுகள் மனிதச் சிசுக்களின் வளர்ச்சியின் போதும் இதே தாக்கத்தைக் காண்பிக்கலாம் என்றும் மனிதனில் சூழல் காரணிகளுடன் சேர்ந்து புரஸ்ரேட் புற்றுநோய் ஏற்பட இவையும் காரணமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்...!

எனினும் இவ்வாய்வு முடிவானது இது தொடர்பான இறுதி முடிவல்ல என்றும் இது இன்னும் தொடரப்பட்டாலே மிகவும் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...!

எதற்கும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளையே நம்பி இருக்காமல் இயற்கையான கருத்தடை முறைகளை பின்பற்றுவதும் ஆண்களுக்கு கருத்தடை சத்திரச் சிகிச்சைகளை செய்வதை ஊக்கிவிப்பதும் சிறந்தது...! பிளாஸ்ரிக் பாவனையைக் குறைப்பதும் சிறந்ததாகவே தோன்றுகிறது...உடலுக்கும் சூழலுக்கும்..!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 4:49 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க