Wednesday, May 25, 2005

மனிதன் விண்ணில் ஆழ ஊடுருவிச் சாதனை..!



Voyager 1 விண்கலம்

மனிதனால் உருவாக்கப்பட்டு விண்ணில் ஆழ ஊடுருவிப் பயணித்த சோடிக்கலங்களான Voyager 1 மற்றும் Voyager 2 இல் Voyager 1 ஆனது எமது சூரியத் தொகுதியின் இறுதி எல்லை அதிர்ச்சி வலயத்தையும் ( termination shock) தாண்டி விண்ணில ஆழ செல்லும் நிலையை எட்டியுள்ளதாக நாசா அறியத்தந்துள்ளது...!இவ்விண்கலம் 1977 இல் அமெரிக்க நாசா விண்ணியல் நிறுவனத்தால் விண்ணில் செலுத்தப்பட்டது என்பது நினைவுகூறத்தக்கது.

இதன் இணைக்கலமான Voyager 2 ஆனது Voyager 1 க்கு சில வாரங்கள் முன் வேறொரு திசையில் விண்ணில் செலுத்தப்பட்டது...! இவ்விரு கலங்களிலும் Voyager 1 ஆனது சூரியனில் இருந்து 14 பில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவிலும் Voyager 2 பிறிதொரு திசையில் 10.4 பில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவிலும் விண்ணில் ஆழ ஊடுருவியுள்ளன...!

மனிதனால் உருவாக்கப்பட்டு விண்ணில் அதிக ஆழத்துக்கு ஊடுருவிய விண்கலமாக Voyager 1 தற்போது விளங்குகிறது...! இது காவும் ஒரு Time capsule இல் golden gramophone வடிவில் பதிவு செய்யப்பட்ட பல மொழி வாழ்த்துக்களும் இசைகளும் இருப்பதாக அறியக் கிடைக்கிறது...!

5 வருட ஆயுள் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட Voyager 1 இன் பயணம் இன்னும் சிறப்புடன் தொடர்வது விசேட அம்சமாகும்...! அத்துடன் இது தன் பயணப்பாதையில் வலுவான மின்காந்த அலைத் தாக்கங்களையும் சந்தித்தே பயணிப்பதாக விஞ்ஞானிகள் இதன் பயணம் குறித்துத் தகவல் தருகையில் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சூரிய மண்டலத்தின் இறுதி எல்லையில் termination shock க்கை Voyager 1 எதிர்கொண்ட போது கடும் மின் காந்த அலைத்தாக்க அதிர்வுகளைச் சந்தித்து வேகத்தடைகளையும் எதிர்கொண்டு பயணித்ததாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்...!



Voyager 1 மற்றும் Voyager 2 இனது பயண விபரங்கள்

Glossary:

Solar wind: Stream of charged particles blown off the Sun and travelling at supersonic speeds

Termination shock: Area where particles from the Sun begin to slow and clash with matter from deep space

Heliosheath: A vast, turbulent expanse where the solar wind piles up as it presses outward against interstellar matter

Heliopause: The boundary between the solar wind and the interstellar wind, where the pressure of both are in balance

Bow shock: The shock wave caused by the edge our Solar System travelling through deep space

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 9:39 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க