Saturday, June 04, 2005

நஞ்சுகளும் பரம்பரை நோய்களும்...!



பங்கசு கொல்லி, பூடை கொல்லி (விவசாயத்தின் போது விசுறும் மருந்துகள்) கொண்டுள்ள இரசாயனங்களான vinclozolin மற்றும் methoxychlor ஆகியவை பரம்பரைக்குப் பரம்பரை நோய்த்தாக்கங்களை ஏற்படுத்தத் தக்க வகையில் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளில் செய்த ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்...!

இம்மருந்துகளின் தாக்கத்துக்கு முகம் கொடுத்த வளர்கரு (முளையம் - embryo) கொண்ட பெண் எலியில் இருந்து உருவான ஆண் எலிகள் குறைந்த அளவு விந்து உருவாக்கத்தையே காட்டியுள்ளன...! மேற்குறிப்பிட்ட இரசாயனங்கள் ஓமோன் சுரப்புக்களைப் பாதித்து இந்த நோய் அறிகுறியைக் காட்டியுள்ளன..!

இவை நேரடியாக டி என் ஏ (Deoxy Ribo Nucleic acid - DNA) யில் பாதிப்பைச் செய்யாமல் பரம்பரை அலகுகளின் (Genes) செயற்பாட்டு முறையில் மாற்றங்களை உண்டு பண்ணி இப்படியான குறைபாடுகளுக்கு வித்திடுகின்றன...! இதேபோல் பாதிப்பு மனிதரினும் சாத்தியம் என்பதுடன் மார்பகப் புற்றுநோய் மற்றும் புரஸ்ரேட் புற்றுநோய்க்கும் இப்படியான தாக்கங்கள் காரணமாயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஐயம் வெளியிட்டுள்ளனர்...!

எனினும் இது குறித்து மக்களை உடனடியாக எச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் காரணம் இப்பரிசோதனையின் போது எலிகள் வழமைக்குமாறாக அதிக அளவு இரசாயனங்களை எதிர் கொண்டன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது...!


மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 10:18 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க