Sunday, June 12, 2005

வால்நட்சத்திரத்தின் மீது ஒரு மோதல்



நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விண்ணில் ஆள ஊடுருவி ஆய்வு நடத்தும் விண்கலம் ஒன்று... அமெரிக்க சுதந்திர தினமான யூலை 4ம் திகதி... வால்நட்சத்திரம் ஒன்றின் தூசிகளையும் பனித்துகள்களையும் விசிறும் திண்மப் பாறை நோக்கி... துப்பாக்கிச்சன்னம் போன்று 100 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கத்தக்க விண்கலச் சன்னங்களை(a small copper probe) - விண்வெளி ஏவுகணைப் (missile)பொறிமுறை மூலம் செலுத்தி மோதவிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்படுகிறது...! இந்த மொத்துகை பூமியில் இருந்து 431 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் நிகழ்த்தப்பட இருக்கிறது...!

இந்த வால்நட்சத்திரத்தின் திண்மப் பாறைப் பகுதி சூரியத் தொகுதி தோன்றிய போது உருவானதாக நம்பப்படும் கூறுகளைக் கொண்டிப்பதாலும்... விண்வெளி மொத்துகைக்கு என்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பொறிமுறையைப் பயன்படுத்தி செய்யப்படும் முதல் ஆய்வு இதுவென்பதாலும் இவ்வாய்வு குறித்து விஞ்ஞானிகள் தங்கள் அதிக அக்கறையையும் வெளியிட்டுள்ளனர்...! இது வால்நட்த்திரம் ஒன்று பூமியைத் தாக்குவதில் இருந்து தடுப்பதாகக் கொண்டு எடுக்கப்பட்ட 1998ம் ஆண்டு கொலிவூட் படத்தின் சாயலை ஒத்ததிருப்பதாகவும் சொல்லப்படுகிறது...!



வால் நட்சத்திரத்தின் மீது விண்கலச் சன்னங்கள் ஏவப்படும் முறையும்...சன்னங்களையும் மொத்தலின் விளைவுகளையும்... தாய்க்கலம் கண்காணிக்கும் மற்றும் ஆய்வு செய்யும் முறைகளையும் படம் காட்டுகிறது.!

மேலதிக தகவல் இங்கு...!

பதிந்தது <-குருவிகள்-> at 10:36 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க